அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, July 31, 2009

(நாளை) ஆகஸ்ட் 1ம் திகதி விடுதலை அடைந்த ஸ்விட்சர்லாந்து!

சுவிட்சர்லாந்து சுவிஸ் கூட்டமைப்பு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு. வடக்கில் ஜேர்மனி, மேற்கில் பிரான்சு, தெற்கில் இத்தாலி, கிழக்கில் ஆஸ்திரியா மற்றும் லெய்செஸ்டீன் ஆகிய நாடுகள் சுவிஸின் எல்லைகளாக உள்ளன. சுவிஸ் வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது. உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட நாடாக ஸ்விட்சர்லாந்து விளங்குகிறது. இங்கு அரசமொழிகளாக ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலியம், உரோமாஞ்சு ஆகிய மொழிகள் உள்ளன. உலகில் நிலத்தினால் சூழப்பட்ட 43 நாடுகளில் ஸ்விட்சலாந்தும் ஒன்றாகும். இதன் தலைநகரம் பேர்ண். மிகப்பெரிய நகர் சூரிச் ஆகும். பேர்ண் சமஷ்டி அமைப்புகளின் தலைநகராகவுள்ள போதிலும் சூரிச் வர்த்த உலகில் அறியப்பட்ட நகரங்களாகவும் உள்ளன. அனைத்துலகத் தொண்டு நிறுவனமான உலக செஞ்சிலுவை சங்கம், உலக வர்த்தக அமைப்பு, ஐக்கிய நாடுகளின் காரியாலயம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஐ.நா காரியாலயம் அந்நாட்டில் இருந்தபோதிலும் 2002ம் ஆண்டுவரை இதில் இணைந்திராத போதிலும் நார்ஷனல் லீக்கின் (தேசிய நல்லிணக்கசபை) உறுப்பு நாடக ஆரம்பத்திலிருந்தும் வந்துள்ளது,
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக 1990இல் ஸ்விட்சர்லாந்தில் நடாத்தப்பட்ட அனைத்து மக்கள் வாக்கெடுப்பு தோல்வியுற்றதால் அதில் இணையும் அந்தஸ்து இல்லாத நாடாகவும் உள்ளது (ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்திய ஒரே ஒரு நாடு ஸ்விட்சர்லாந்து மட்டுமே). இந் நாடு 1291ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் திகதி விடுதலை அடைந்த செய்தி வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இன்று வரை ஸ்விட்சர்லாந்து ஆகஸ்டு 1ம் நாளை தேசிய விடுமுறையாக கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். ஸ்விட்சர்லாந்து 1848ம் ஆண்டு செப்டெம்பர் 12ம் நாளில் இருந்து இன்றைய காலம் வரையுள்ள நடைமுறைக்கு வந்த சமஷ்டி கட்டமைப்பின் இடையில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1291இல் விடுதலை அடைந்த போதிலும் இன்றைய மத்திய ஸ்விட்சர்லாந்து நிலப்பகுதியை மட்டுமே நிலப்பரப்பாக கொண்டிருந்தது. பின்பு நாளடைவில் நில அபகரிப்பு காலம் காலமாக நடாத்தப்பட்டு 1848ல் எல்லைகள் வரையப்பட்ட பரந்த நவீன ஸ்விட்சர்லாந்து தோன்றியது.

ஸ்விட்சர்லாந்தின் மொத்த நிலப்பரப்பு 41,285 சதுர கிலோமீட்டர் (15,940 சதுர மைல்கள்) களாகும். இது மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது பரப்பளவில் 136ம் இடத்தில் உள்ளதுடன் அந்நாட்டின் நீர்ப்பரப்பு நிலப்பரப்புடன் ஒப்பிடும் பொழுது 4.2% மாகவும் உள்ளது. சுவிஸ் நாடானது எல்லைகளாக பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஆஸ்திரியா, இலித்துவேனியா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நீண்ட காலமாக நடுநிலையைக் கடைப்பிடித்து வரும் சுவிஸ் 1815ல் இருந்து எந்த போரையும் சந்திக்கவும் இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.1291ல் சுதந்திரமடைந்த சுவிஸ் 1499ம் ஆண்டு 22 செப்டெம்பரில் அங்கீகாரமற்ற கட்டமைப்புடன் ஆட்சி செய்த போதிலும் 1648ம் வருடம் ஒக்டோபர் 24ல் அங்கீகரிக்கப்பட்டது.
பின்பு 1798ல் பிரஞ்சு நாட்டின் படையெடுப்பினால் சிறிது காலம் ஆட்சி மாறி நெப்போலியன் வீழ்ச்சி வரை பலரது ஆலோசனைகளையும் உள்ளடக்கியதான இன்றய ஸ்விட்சலாந்து கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தது. 1815ம் வருடம் ஆகஸ்டு 7ம் நாள் நடைமுறைக்கு வந்த அமைப்பு முன்பு இருந்த "கன்டொன்" (இலத்தீன் மொழியில் துணை நிலப் பிரிவுகளைக் குறிப்பதாகும்) அமைப்பை அடிப்படையாக கொண்டிருந்ததாகும். 1884ல் உருவான சமஷ்டி ஆட்சி மூலமாக 26 கன்டொன்கள் அமைக்கப்பட்டதுடன் இரு நாடளுமன்ற அமைப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இரண்டு நாடாளுமன்றங்களில் ஒன்று கன்டொன் உறுப்பினர்களை (46 உறுப்பினர்) பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மற்றதில் தேசிய அளவில் (200 உறுப்பினர்கள்) மக்கள் தெரிவின் மூலமாக நியமிக்கப்படுவர். இந்த கன்டொன் அமைப்பானது சமஷ்டித் திட்டத்தில் 1848இல் சேர்க்கப்படு முன்பாகவே முன்னய ஆட்சிகளில் இதை ஒத்த அமைப்பு 700 வருடங்களாக இருந்தமை குறிப்பிடத்தக்க வரலாறு. கன்டொன்கள் ஒவ்வொன்றும் சுயமாக ஆட்சி செய்யும் அமைப்பு சமஷ்டித் திட்டத்தில் உள்ளபோதிலும் இவைகள் மத்திய நாடாளுமன்றத்தில் அவ்வப்போது கூடுகிறன. இந் நாட்டின் அரசியல் யாப்பின்படி சட்டம், ஒழுங்கு (பாதுகாப்பு), வெளி விவகாரம், பொருளாதாரம், நாணயம், ஆகிய விடயங்களில் சுயநிர்ணயம் இருந்த போதிலும் பொது நாணயத்தை 1850ல் இருந்து ஸ்விட்சர்லாந்து கடைப்பிடிக்கின்றது. 2005ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஸ்விட்சர்லாந்தின் மொத்த தேசிய வருமானம் $264.1 பில்லியன்களாகவும் (இது உலகின் 39ம் இடம்) சனத்தொகை 7,2888,010 ஆகவும் (அண்ணளவாக7.3 மில்லியன்கள்) இருந்தது. 2006 ஆண்டுக் கணக்கெடுப்பில் சனத்தொகை 7.5 மில்லியன்களாகவும் தனிமனித வருமானம் $32,300 ஆகவும் உள்ளது. இது உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது 10ம் இடத்தில் இருப்பது ஸ்விட்சர்லாந்தின் சிறப்புக்குச் சான்றாகும்.
தகவல் - விக்கிபேடியா

நல்லூர் முருகா காப்பாத்தப்பா! இந்த மோட்டுத் தமிழரை! கொலை கொள்ளை கடத்தல் புரிந்தவர்கள் வாயில் தர்மம் - திருக்குறள் எல்லாம் இப்போது வருகுதப்பா!



அகிலத்தைக் காப்பவனே!
அநீதியை அழிப்பவனே!
அக்கிரமம் செய்தோர்
அறம் உரைக்கும் நாளிதையா!

அப்பாவி மக்களை அந்தரத்தில் தவிக்கவிட்டு
அந்நிய நாட்டில் அவரொருவர் மணம் செய்தார்!
ஆண்டியாக்கியபின் அவல வாழ்வு போதாதென்று
அந்நிய நாட்டில் அரசு அமைக்கப் போகிறார்கள்!

காவலுக்கு வந்தவனை கயமையாகக் கொன்ற பின்னர்
காரணத்தைச் சொல்லவில்லை கட்டாகப் பழிசொல்வார்!
மன்னிப்பை வேண்டும் பக்குவம் மனிதர்க்கு உண்டென்ற
மாண்பான சிந்தனையை மறந்துவிட்டார் மோடரிவர்!

நாயைவிடக் கேவலமாய் மிருகம் ஒன்று உண்டென்னில்
பாயில் படுத்தவனைக் கொன்றொழித்த புலிகள்தான்!
வீடிழந்து தொழிலிழந்து அறிவுக்கல்வி தானிழந்து
வீணாக முட்கம்பிச் சிறையினுள்ளே வாடுகின்றார்!

வணங்காமண் பொருட்களும் கொழும்பில் கிடக்கிறது
வரிசையாய் மலங்கழிக்க வாக்களித்த பாவத்திற்கு
வன்னி மக்கள் துயருறும் வேதனையை அறியாமல்
வீறாப்புப் பேச்சையும் நீ அடக்க வா முருகா!

5 நிமிடத்தில் உதித்த என் தமிழ் கவி இது! எப்படி?

மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகிறதா? என் மனம் பகர்கிறது! பதைக்கிறது நெஞ்சம்!

பக்தி என்னும் எனது 10-08-2008 பதிவிலிட்ட தினகரன் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல
1982ல் மாவை முருகனும் தெல்லிப்பழை துர்க்காதேவியும் காசிப்பிள்ளையாரும் வாழை வெட்டின்போது நிலத்தில் விழுந்தார்கள்! அதன்பின்னர் நாடளாவிய ரீதியில் பிரச்சனைகள் இடம்பெற்றன!
2006ல் எமது முருகன் தேரால் இறங்கி வரும்போது வீழ்ந்ததும் - ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று நினைத்தேன் - கடைசியில் எனக்குத்தான் நடந்தது! புலிகளின் சூடுபட்டுத் தப்பினேன்!2007இல் வழக்கம்பரை அம்பாள்!
2009இல் நேற்று எமது கருவறைப் பிள்ளையாரையே பிரட்டிவிட்டார்கள்! ஏதோ - எங்கோ - என்னவோ நடக்கப் போகிறதா? யாமறியோம் பராபரனே!
ஆடி மாதமே தமிழருக்கு வேதனைதானா?
கடவுள்தான் தமிழரைக் காப்பாற்ற வேண்டும் - தந்தை செல்வா!

இப்படியெல்லாம் நடக்கிறது! புதிய எனது அனுபவம்! கிறீஸதவ தேவாலயத்தில் தேவாரமும் - ஜோதிப் பாடலும் பாடிய எனது மறக்க முடியாத அனுபவம்! பாகம் 2


நான் தற்போது இருக்கும் இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்திலுள்ளது இம்மன்சே(Immensee) என்ற இடம். இங்கேதான் எனது இரண்டாவது நிகழ்வு இடம்பெற்றது. 50பேர்வரை அந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர். இதுவும் ஒரு கிறீஸ்தவ தேவாலயத்தில் நடந்தது. லுசேர்னில் இருந்து பரத நாட்டிய நிகழ்வை நடத்த ஒரு நாட்டியக் குழுவினரும் வந்து இருந்தனர். என்னை நிகழ்வுக்கு அழைத்துப்போக (ஏற்கனவே கடிதப்பரிமாற்றங்கள் மூலம்) புகையிரத நிலையத்திற்கு தனது வண்டியில் வந்த காத்திருந்தார் வணக்கத்திற்குரிய பாதிரியார் பௌல் ஏர்லர் (Paul Ehrler)அவர்கள்.
நிகழ்வுகளில் முதல் பாதிரியார் டொச் மொழியில் தனது ஆராதனையை நிகழ்த்திய பின்னர் என்னைப் பாடுமாறு அழைத்தார். இலங்கையிலிருந்து எடுத்தச் சென்ற சிவயோக சுவாமிகளின் நற்சிந்தனையில் இருந்து இம்முறை பாடல்களை நான் பாடினேன்! எனது பாடலுக்குப் பின்னர் மீண்டும் அவரது உரை. அதன்பின் நாட்டியம். பின்னர் அவரது உரை. அதன் பின்னர் எனது பாடல். இப்படி மாறிமாறி அந்நிகழ்வு நடைபெற்றது. இதன்பின்னர் மதிய போசனம் இடம்பெற்றது. அதன்பின்னர் என்னை தானே மீண்டும் அழைத்துவந்து வழியனுப்பி வைத்தார் வணக்கத்திற்குரிய பாதிரியார் அவர்கள். நான் விடைபெறும் நேரத்தில் என்னிடம் ஒரு கடித உறையையும் தந்தார். புகையிரதத்தில் ஏறியதும் அந்த உறையைப் பிரித்தேன். அதனுள் அழகான ஒரு நன்றி மடலும் அதனுள் 100 சுவிஸ் பிராங்கும் இருந்தது. உடனேயே அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் எனது ஆத்ம திருப்திக்காகவே இந்நிகழ்வை மேற்கொண்டேன் நான் பணத்தை எதிர்பார்க்கவில்லையே! என்றேன். அதற்கு அவர் நீர் பயணித்த செலவு மற்றும் உமது நேரம் உமது உடல் வலுவுக்கான ஒரு சிறு தொகையே இது என்று சொன்னார்.பொது சேவையாயிருந்தாலும் மனித வலுவுக்கு எமது நாடுகளைப் போலல்லாமல் ஒரு ஊதியத் தொகையை இங்கு கட்டாயமாக வழங்கி வருவது குறிப்பிடத் தக்கது.
முதல் அனுபவத்தைப் பற்றி நான் தேவாரம் பாடிய அந்தப் பெரிய தேவாலயத்தின் பாதிரியார் வணக்கத்திற்குரிய றேரோ முல்லர்(Reto Müller)அவர்களுக்கு ஈமெயிலில் ஒரு செய்தி அனுப்பியிருந்தேன். அவர் என்னைச் சந்தித்துப் பேச ஒரு நாளை அவரது அலுவலகத்தில் ஒதுக்கியிருந்தார். நானும் அவருடன் சுமார் 40 நிமிடங்கள் வரை மனம்விட்டுக் கதைத்துவிட்டு விடைபெறும் சமயம் என்னை ஆசீர்வாதம் செய்யும்படி கேட்டேன் - அவர் ஆசீர்வதித்தார். முடிந்ததும் நான் புறப்பட்ட சமயம் எனது கையைப்பிடித்து தான் என்னிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நான் சொன்னேன் - நான் எமது சமயத்தின் தலைவரல்ல - உங்களுக்கு ஆசீர்வாதம் செய்யும் தகுதி எனக்கு இல்லை என்றேன்! அதற்கு அவர் உமது மனம் தூய்மையானது என்னை நீர் வாழ்த்த முடியும் என்றார். திருமுறைப் பாடல் ஒன்றை இசைத்து அவரது சிரசில் என் இருகைகளை வைத்து வாழ்த்துத் தெரிவித்தேன். இது என் வாழ்வில் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு அனுபவமாகும்.

3ஆவது தடவையாக

இதன் பிறகு ஓரிரு மாதங்களின் முன்னர் முன்னைய கட்டுரையில் குறிப்பிட்ட இராஜன் அண்ணனுடைய தாயார் வவுனியாவில் மரணித்தார். அதற்காக ஒரு ஆத்ம சாந்திப் பிரார்த்தனையை அவர் தமது தேவாலயத்தில் ஒழுங்கு செய்திருந்தார். இதற்கு ஒழுங்குகளை அவர் மேற்கொண்டபோது பாதிரியார் அவர்களே இராஜன் அண்ணனிடம் முகுந்தனையும் ஒரு பாடல் பாட வைக்கலாம் தானே! என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். இராஜன் அண்ணரும் என்னுடன் தொடர்பு கொண்டு என்ன உம்முடைய பாடலில் பாதிரியாருக்கு ஒரு ஆசை உம்மை ஏதாவது பாடட்டாம் என்று சொன்னார். மேலும் பாடும் பாடலின் அர்த்தத்தை முன்கூட்டியே தனக்குத் தரும்படியும் அவர் கேட்டதாகச் சொன்னார் - நானும் ஆத்ம சாந்திக்காக கொழும்பில் என்னைக் கவர்ந்த அருளொளி நிலையத்தின் ஜோதிப் பாடலை அவருக்குப் பிரதிபண்ணிக் கொடுத்தேன். அவர் அதை மொழிபெயர்ப்புச் செய்து கொடுத்தார். குறிப்பிட்ட நாளில் நிகழ்வு இடம்பெற்றது. பாடலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட வணக்கத்திற்குரிய பாதிரியார் அவர்கள் எல்லாம் நிறைவு பெற்ற பின்னர் வருகைதந்த அனைவரையும் தேவாலயத்தில் மெழுகுதிரிகளை ஏற்றச் செய்துவிட்டு - இராஜன் அண்ணனின் தாயாருடைய ஆத்மசாந்திக்கும் - தற்போது ஈழத்தில் நடைபெறும் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கும் - நாட்டில் சாந்தி கிடைக்கவும் இப்போது பிரார்த்தனை நடைபெறும் என்று சொல்லி என்னை அழைத்தது உண்மையிலேயே என்னை ஓர் கணம் நெகிழவைத்தது. சமய தத்துவங்களை அறிந்தவன் என்ற வகையில் அவரது வேற்றுமை கடந்த செயற்பாடுகள் என்னால் மறக்க முடியாத ஒரு ஆனந்த அனுபூதியாகும்.
Note - இந்தப் பதிவிலுள்ள படங்கள் யாவும் சுவிஸ் நாட்டின் படங்களே! முன்னைய பதிவிலுள்ளவை எமது மாவட்டத்திலுள்ள படங்கள்!

இப்போது கிடைத்த செய்தி - எமது மூளாய் பிள்ளையார் மற்றும் முருகன் கோவில்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!


நேற்று 30.07.2009 வியாழக்கிழமை இரவு 11.00மணிக்கும் 4.00மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கோவில் கதவு உடைக்கப்பட்டு உள்ளிருந்த சகல விக்கிரகங்களும் பெயர்க்கப்பட்டு இருந்த சகல பெறுமதியான பொருட்களும் நகைகளும் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக கொழும்பிலிருந்த நண்பர் ஒருவர் அறிவித்தார். உடனடியாகவே ஊருக்கு தொடர்பு கொண்டு சம்பவத்தை ஊர்ஜிதம் செய்த பின்னர் பதிவிலிடுகிறேன். 2 தடவைகள் பொலிசார் வந்து விசாரணைகள் மற்றும் கைரேகைகளைப் பதிவுசெய்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூலஸ்தானத்தில் இருந்த பிள்ளையாருடைய சிலையையும் பெயர்த்து மறுபக்கமாக திருப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்னர்தான் அரசடிச் சந்தியிலிருந்த மற்றும் சுழிபுரம் தபாற்கந்தோருக்கு அண்மையிலிருந்த இராணுவச் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டன. நேற்று யாழ்ப்பாண நகருக்கு இண்மையில் இளம் தம்பதியினர் அலவாங்கால் கொத்திக் கொலைசெய்யப்பட்டு பணம் நகை கொள்ளை என்ற செய்தி பத்திரிகையில் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

Thursday, July 30, 2009

எனக்குப் பிடித்த நல்லூரர்த் தேரடி!


வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லமற் போமே! என்றும்
தேரடியில் எந்நாளும் இருப்பான் ஆசான்
தெருவாலே வருவாரைப் போவாரை வைவான்
ஆரடா நீ யென்றே அதட்டி ஆசான்
அன்பிலான் போலவே துன்புறுத்தி நிற்பான்

என்றும் யோகர் சுவாமிகள் பாடிய இந்த இடம் தான் எனக்குப் பிடித்தமான அமைதியான இடம். இங்கு ஒரு தடவை என்னுயிர் போகுமுன் வந்து வீழ்ந்து வணங்க வேண்டும் என்பதே என் தீராத ஆசை!

மறைந்த ரவிராஜ விடுதலைப் புலிகளைப் பற்றச் சொன்னது! புலிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகள் அல்ல நாம்! பார்க்க - தினக்குரல் 31.07.2003

புலிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகள் அல்ல நாம் - ரவிராஜ் என்ற தலைப்பில் தினக்குரல் 31.07.2003 ஒரு செய்தி வந்திருக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகள் தமக்குத் துதிபாடிய இவருக்கும் மாமனிதர் விருதை வழங்கியது குறிப்பிடத்தக்கது.சந்தேகம் இருந்தால் தயவுசெய்து இதை நூலகத்தில் பார்வையிடுங்கள். நான் சில முக்கிய பத்திரிகைச் செய்திகளை கணனியில் சேமித்து வைத்திருப்பது வழக்கம். அதில் சில தகவல்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

1. செல்வா அறங்காவல்குழு அமைத்தபோது கூட்டணித்தலைமை புறக்கணிக்கப்பட்டது தற்போதைய பூசல்களுக்கு …. என்கிறார் - ரவிராஜ் சுடர் ஒளி 4.November.2003
2. கட்சிக்கொள்கைப்படி நடப்பதால் எனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியிலேயே முடியும் என்கிறார் ஆனந்தசங்கரி சுடர் ஒளி 19.January.2004
3.இந்தியா சென்றுவருவதாக என்மீதுமட்டும் வி பு குற்றம் சுமத்துவது நியாயமா? செய்தியாளர் மாநாட்டில் சங்கரி கேள்வி சுடர் ஒளி 4.November.2003
4.புலிகளை விமர்சிப்பதற்கு கூட்டணிக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை - விநாயகமூர்த்தி எம்பி வீரகேசரி 1.september.2003
5.யதார்த்தம் புரியாமல் பேசுபவர்கள் கூட்டணியினரே - கலாநிதி குமரகுருபரன் வீரகேசரி 5.september.2003
6. கூட்டணியின் மத்தியகுழு விரைவில் கூடி சங்கரி மீது நடவடிக்கை எடுக்கவுள்ளது - ரவிராஜ் வீரகேசரி 17.November.2003
7.நாளை கூட்டணியின் மத்திய குழக்கூட்டம் சங்கரியுடன் சம்பந்தன் ஜோசப் பேச்சு
வீரகேசரி 29.November.2003
8. சங்கரியைத் தெரிவுசெய்த மத்தியகுழுவே அவரை நிராகரித்திருக்கிறது - பதவிவிலகவேண்டும் சந்திரநேரு எம்பி வீரகேசரி 9.December.2003
9.கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திருக்கோவிலில் கூடி ஆராய்வு சம்பந்தன் கலந்துகொள்ளவில்லை வீரகேசரி 22.December.2003
10. கடும் பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டணியின் மத்தியகுழுக் கூட்டம் - சர்ச்சைக்குரிய விடயங்கள் தவிர்ப்பு வீரகேசரி 2.February.2004

கொலை - மகா பாதகச் செயல் - இதனை ஆதரித்த குற்றத்துக்கு தண்டனை பெறும் தமிழர்கள்! செல்வாவை அடகு வைக்கிறார்கள் சம்பந்தனும் மாவையும் - இறைவா இது நியாயமா?

ஏகப் பிரதிநிதிகள் என்ற ஒரு கோஷத்திற்கு - எந்த உயிரையும் நிந்திக்காத ஈழத்துக் காந்தியின் பெயரையும் அவரது கட்சியையும் அடாத்தாக தம் வசமாக்கிய மாவையரும் - சம்பந்தரும் செய்த பாவச் செயலின் தண்டனைதான் தற்போதைய தமிழ்மக்களின் முட்கம்பிக்கிடையிலான அவல வாழ்க்கை. இதை தெரிந்து பிழைவிட்ட அனைவருமே ஏற்றுக் கொள்ள வேண்டும். எமக்கு மேற்பட்ட சக்தியிலேயே நாம் ஏக உரிமை கொண்டாட முடியாத நிலையில் அறிவற்ற - சிந்தனை சக்தியில்லாத மனிதரை - காகத்தைச் சுடும்போல் சுட்டுக்கொல்லும் ஒரு பயங்கரவாதி இயக்கத்தை முன்னெடுப்பதிலேயே அவர்கள் எவ்வளவு போட்டியாக செயற்பட்டார்கள்.
புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளென்று ஏற்றுக் கொள்வதில் மறுபேச்சுக்கு இடமில்லை - எந்தக் கனவானும் மறக்க முடியாது என்கிறார் சம்பந்தர் என்ற 9.9.2003 தினக்குரல் செய்தி வந்ததும் அந்த முட்டாள் மனிதருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்குப் பின்னரும் 2 கடிதங்கள் எழுதினேன். எந்தப் பதிலுமில்லை. ஒரு கட்சியின் அலுவலகத்தில் பணிபுரிந்த - ஒரு கட்சியின் உறுப்பினன் - ஒரு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் என்ற எந்த விதமான அருகதையும் எனக்குத் தேவையில்லை - அட உண்மையை எழுதுகிறானே அவனுக்கு ஒரு பதில் என்று ஒரு சாதாரண மனிதனாக என்னை நினைத்து எழுதியிருக்கலாம் பாவம் தவறி விட்டார்.
அது நடைபெற்ற பிறகு புலிகளின் மற்றைய ஊதுகுழல்களான மறைந்த ஜோசப் மற்றும் சந்திரநேரு போன்றோர்(அவர்கள் அமரரானாலும் உண்மையை எழுதுவதற்காக அவர்களின் பெயர்களை இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது) புலிகளின் பணிப்பிற்கமைய கட்சித் தலைவர் திரு. ஆனந்தசங்கரியை தலைவர் பதவியிலிருந்த நீக்க மாவட்ட ரீதியாக கிளைகளைக் கொண்டு தீர்மானம் எடுத்தனர். 30.11.2003 கூட்டம் பலத்த சர்ச்சையில் முடிவடைந்த மறுநாள் - தாமும் பதவி விலகுவதாகவும் அவரையும் பதவி விலகும்படியும் சம்பந்தனும் ஜோசப்பும் கலந்து ஆலோசனை செய்திருக்கிறார்கள். விடாப்பிடியாக தமது பிழை என்ன என்று கேட்டு தமது நிலையில் உறுதியுடன் இன்றுவரை தனித்து நிற்கும் சங்கரியின் உறுதி எங்கே? பதவிக்காகவும் தமது தெளிவற்ற அரசியல் நிலைப்பாடுகளாலும் மக்களை நட்டாற்றில் விட்ட அந்த மரமண்டைகள் எங்கே? எனக்கு வரும் கோபத்திற்கு இதை எழுதவேண்டியவனாக இருக்கிறேன். அரசையோ அல்லது இந்த ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டமைப்பையோ யாரும் நம்பாதீர்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள். தமது சக பாராளுமன்ற உறுப்பினரே கைது செய்யப்பட்ட நிலையில் தமக்கு வாழ்வழித்த மக்கள் கழிப்பறைக்கச் செல்லவும் -வாழ்வாதாரத்தின் முக்கிய தேவையான நீருக்கும் வரிசையில் நிற்கும் நிலையில் அம்மக்களிடம் வாக்குகளைப் பெற்று சொகுசாக கொழும்பில் அதுவும் பாதுகாப்புடன் திரியும் இந்த ஜடங்களின் பேச்சை - இனியாவது கொஞ்சம் யோசித்து உங்கள் முடிவுகளைத் தீர்மானியுங்கள்! - அனுபவமுடைய தமிழ் மக்களே! என்பதே எனது பகிரஙக வேண்டுகோள்.

இப்படியெல்லாம் நடக்கிறது! புதிய எனது அனுபவம்! கிறீஸதவ தேவாலயத்தில் தேவாரமும் - ஜோதிப் பாடலும் பாடிய எனது மறக்க முடியாத அனுபவம்!














பதிவிடத் தொடங்கி சரியாக ஒரு வருடம் நிறைவுபெறும் இந்த July மாதத்தில் தற்போது சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் எனக்கு ஏற்பட்ட இந்த மறக்க முடியாத சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டேயாக வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதிகிறேன்.

நாம் இருக்கிற இந்த மாவட்டத்தின் தலைநகரம் சுவிற்ச் (Schwyz) என்று அழைக்கப்படுகிறது. நாட்டை சுவைற்ச் (Schweiz) என்பார்கள் - உச்சரிப்பிலே சிறிது தடுமாற்றம் வந்தே தீரும். எமது மாவட்டத்தின் பெயரும் சுவிற்ச்தான் (Schwyz). அழகிய மலைப்பிரதேசம் - ஏரிகள் காடுகள் குடிமனைகள் என்று பரந்து இருக்கிறது. இங்கு சைவக் கோவில்கள் எதுவுமில்லை. தமிழர்களும் அதிகமில்லை. எனவே நாம் கோவிலுக்குப் போவதென்றால் அருகில் இருக்கும் சுக்(Zug) அல்லது லுசேர்ன் (Luzern) அல்லது சூரிக் (Zürich ஆங்கிலத்தில்தான் சூரிச்) இங்குள்ள கோவில்களுக்குத் தான் போக வேண்டும். ஆனால் எமது மாவட்டத்திலுள்ள கறுப்பு மேரி மாதா ஆலயம் பிரசித்தி பெற்றது. நாம் முகாமிலிருந்த ஏழரை மாதக் காலப் பகுதியில் ஒவ்வொரு செவ்வாயும் இந்த தேவாலயத்திற்குச் சென்று வருவது வழக்கம்.
நான் சுவிற்ச்லாந்துக்கு வந்தது 19.04.2007இல் - 23இல: முகாமில் சென்று பதிந்தபின் மே 4இல் இந்த மாவட்டத்திற்கு என்னை மாற்றினார்கள். இங்குள்ள மோர்ஷாஹ் என்ற முகாமில்தான் இடுத்த ஏழரை மாதங்கள் வாசம். அப்போது எம்மிடம் அடிக்கடி வந்து செல்லம் இராஸன் அண்ணா ஒரு நாள் வந்து ஒரு நிகழ்வு நடப்பதாக எம்மை அழைத்துப் போனார். என்ன நிகழ்வு என்றால் இந்த குறிப்பிட்ட தேவாலயத்திற்கு ஏன் அதிகமான இலங்கையர்கள் வருகிறார்கள் என்ற ஒரு சிறிய பரிமாற்ற நிகழ்வு.
நான் சுவிற்ச்லாந்துக்கு வந்தது 19.04.2007இல் - 23இல: முகாமில் சென்று பதிந்தபின் மே 4இல் இந்த மாவட்டத்திற்கு என்னை மாற்றினார்கள். இங்குள்ள மோர்ஷாஹ் என்ற முகாமில்தான் இடுத்த ஏழரை மாதங்கள் வாசம். அப்போது எம்மிடம் அடிக்கடி வந்து செல்லம் இராஸன் அண்ணா ஒரு நாள் வந்து ஒரு நிகழ்வு நடப்பதாக எம்மை அழைத்துப் போனார். என்ன நிகழ்வு என்றால் இந்த குறிப்பிட்ட தேவாலயத்திற்கு ஏன் அதிகமான இலங்கையர்கள் வருகிறார்கள் என்ற ஒரு சிறிய பரிமாற்ற நிகழ்வு.

அன்று 26.08.2007 எனது பெரிய தந்தையாரின் பிறந்த நாள். சரி என்று காலை 10.00 மணியளவில் நாம் ஒரு பாடசாலையில் நடைபெற்ற முதல் நிகழ்வில் கலந்து கொண்டோம் எமது மாவட்டத்திலிருக்கின்ற தமிழர்களும் - சுவிஸ நாட்டவருமாக சுமார் 80பேர் இந் நிகழ்வில் கலந்த கொண்டார்கள். விவரணப் படஙஇகள் கருத்துரைகள் பரத நாட்டிய நிகழ்வுகள் சுவிஸ நாட்டவரின் இசை என்று பல நிகழ்வுகள் நடைபெற்ற பிறகு இரு நாட்டவரும் எதிரெதிராக அமர்ந்து இலங்கை உணவு அருந்திüனோம். அறிமுகங்கள் மற்றம் நட்பு ரீதியில் இந்த நிகழ்வைத் தொடர்ந்து அருகிலிருந்த கிறீஸ்தவ தேவாலயத்தில் ஒரு பிரார்த்தனை இருக்கிறது என்று அழைத்துப் போனார்கள் - அருகிலிருந்தபடியாலஇ எல்லோரும் நடந்தே சென்றோம். நகரின் மத்தியில் அமைந்திருந்த இந்த தேவாலயத்தள் போனதுமே எனக்கு தூக்கி வாரிப் போட்டது. தேவாலயத்தின் பீடத்திற்கு முன்பாக பிள்ளையார் மகாலட்சுமி முருகனுடைய படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
எல்லோரும் வந்த அமர்ந்ததும் என்னை வந்து கேட்டார்கள் தேவாரம் பாடுவீர்களா என்று? ஓம் என்று சொன்னேன். வணக்கத்திற்குரிய பாதிரியார் தமது வழிபாடுகளை முடித்துக்கொண்டு என்னை அழைத்தார்.

3 தடவைகள் பிரணவ மந்திரத்தை ஒலிபெருக்கியில் இசைத்தபோதே அதிர்வு கொண்ட தேவாலயத்தில் மெய்யுருகி தேவாரத்தையும் புராணத்தையும் வாழ்த்தையும் இசைத்து முடித்தேன். நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று முடிந்த பிறகு பங்குபற்றிய அனைவருமே வந்து பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்கள். சிறு வயதிலேயே கொஞ்சம் சங்கீதம் கற்றதனால் ஓரளவு பாட முடியும். நிகழ்வில் கலந்த கொண்ட இன்னொரு பாதிரியார் தமது இடத்தில் நடைபெறப் போகும் ஒரு நிகழ்வில் என்னை வந்து பாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். (மீதி பின்னர்)

நல்லூரைக் கும்பிட்டு நீபாடு - அதனாலே நாட்டிலுள்ளபிணிகள் ஓடும்! - தேரடிச் செல்லப்பரின் சீடன் சிவயோக சுவாமிகள்


நல்லூர் எசமானரும் அவரது மகன் சயந்தன் அவர்களும்

இராகம் - ஜோகினி
தாளம் ஆதி

பல்லவி

நல்லூரைக் கும்பிட்டு நீபாடு - அதனாலே
நாட்டிலுள்ளபிணிகள் ஓடும்!

அநுபல்லவி

செல்லாதே வெறுங்கையாய் செல்லப்பன் வாழ்ந்தநாடு
தேங்காயுடன் பழம் கொண்டு நீ செல்லு - (நல்லூரைக்)

சரணம்

வாடி உன் மனம் ஓடினாலும் வருத்தங்கள்
கோடி கோடியாகக் கூடினாலும் - குறைகள் வந்து
தேடி உன்னை மூடினாலும் செல்லப்பன் பாதம் சிந்தித்தால் ஓடி ஓடிப்போமே!
பெண்டு பிள்ளைகளென்று பேதைமை கொண்டு நீ
கண்ட கண்ட இடம் கலங்கி நீ திரியாதே! - (நல்லூரைக்)

Wednesday, July 29, 2009

"நல்லைக் குமரன்" 17ஆவது நூல் வெளியீடு - 04.08.2009


யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுவினரால் நல்லூர் முருகப் பெருமானுடைய திருவிழாக் காலங்களில் வருடாந்தம் வெளியிடப்படும் நல்லைக் குமரன் மலர் தொடர்ச்சியாக 17ஆவது முறை இந்தத்தடவையும் எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் நாவலர் மண்டபத்தில் வெளியிடப் படவிருக்கிறது.

அலங்காரக் கந்தனின் அழகுத்திருக் கோலங்களுடன் - அருமையான கட்டுரைகள் கவிதைகள் அடங்கிய நூலை ஒவ்வொரு தடவையும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அடியேனுக்கு இச்செய்தி பேருவகை அளிக்கிறது! எப்போது இப்புத்தகத்தைப் பார்ப்பேன் என்ற ஆவலில் இச்செய்தியைப் பதிவிலிடுகிறேன். தகவலைத் தெரிவித்த மாநகர சபையின் முன்னாள் செயலக அதிகாரி சைவத்திரு. இரத்தினசிங்கம் அவர்களுக்கு நன்றிகள்!

மரண அறிவித்தல் - திருமதி சாந்தகுமாரி விக்னராசா (சிரேஷ்ட விரிவுரையாளர், ஆங்கிலத்துறை, யாழ்.பல்கலைக்கழகம்)


திருமதி சாந்தகுமாரி விக்னராசா நேற்று (28.07.2009) செவ்வாய்க்கிழமை மாலை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார் இ.த.விக்னராசா (மேல் நீதிமன்ற நீதிபதி, யாழ்.மாவட்டம்) அவர் களின் அன்பு மனைவியும் சங்கீதா (U.K), சவீந்திரா (U.K), சஞ்சேந்திரா (சட்ட விரி வுரையாளர், யாழ்.பல்கலைக்கழகம்) ஆகி யோரின் அன்புத் தாயாரும் உதயசங்கரின் (U.K) அன்பு மாமியாரும் செல்வன் உதேசனின் (Timy) அம்மம்மாவும் காலஞ்சென்ற திரு.திருமதி ஒ.க.இராசதுரை தம்பதியினரின் அருமை மகளும் காலஞ்சென்ற திரு.திருமதி இராமசாமி தம்பையா தம்பதியினரின் அருமை மருமகளும் காலஞ்சென்ற வால்ரர் பாலகிருஸ்ணன் மற்றும் இராசதுரை, தாமரைகுமார், அரசகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வு பற்றிப் பின்னர் அறியத்தரப் படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
இ.த.விக்னராசா (கணவர்)
(மேல் நீதிமன்ற நீதிபதி, யாழ்ப்பாணம்).
இல.1, செட்டித்தெரு, நல்லூர்,
யாழ்ப்பாணம்.
021 222 2361, 021 222 9709

கனடாவிலிருந்து விக்கி அண்ணர் - உதயன் செய்தியை அனுப்பியபின்னர் நீதவான் உயர்திரு. இ.த.விக்னராஜா அவர்களுடன் உடனடியாகவே தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தேன்! அவரது சகோதரி திருமதி பொன்மலர் இராஜேஸ்வரன் அவர்களுடன் பேசினேன். அவர்கள் சொன்னார்கள் - இப்போது நீ வரலாம்தானே! நிறைய பணிகள் செய்ய வேண்டிய நேரம் உடனே வாவென்று! உண்மை எமது பணிகளைச் செய்ய நான் ஏற்கனவே திட்டமிட்டதுபோல விரைவில் நாடு திரும்ப வேண்டும்!

தகவலுக்கு நன்றி - கனடாவிலிருக்கும் விக்கி அண்ணாவுக்கு!