அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, July 5, 2009

இலங்கையில் என்ன நடக்கிறது?காலாகாலமாக நடைமுறையிலிருந்து வந்த பல பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படாமல் திரைமறைவில் மாற்றப்பட்டு வருகிறதா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது!
கவலையீனமாக நாமிருந்தால் தமிழிலுள்ள இலங்கையையும் - ஸ்ரீ லங்கா என தமிழில் மாற்றிவிடுவார்கள்!


ஆங்கிலத்தில் சிலோன் என்றிருந்த பல பெயர்கள் ஸ்ரீலங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இலங்கை மத்திய வங்கி ஆங்கிலத்தில் சென்றல் பாங் ஒப் சிலோன் என்றிருந்தது. தற்போது சென்றல் பாங் ஒப் ஸ்ரீ லங்கா என்று மாறிவிட்டது.


பெற்றோலியக் கூட்டத்தாபனத்தின் சின்னத்தில் இலங்கை என்றிருப்பது லங்கா என மாற்றப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்கு முன் ஸ்ரீ எப்போது வருமோ தெரியாது?
மொழி அழிப்பு - இன அழிப்பில் ஈடுபட்டுள்ள அரசாங்கத்தை தட்டிக்கேட்பது யார்?No comments: