அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, July 23, 2009

சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லையில்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைச்சர்கள் விஜயம் - அறிவுடன் யாரிருக்கின்றாரோ – நானறியேன் பராபரனே!

சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லையில்! யாழ் மாநகர சபை – வவுனியா நகர சபை – ஊவா மாகாண சபை தேர்தல்களில் மக்கள் தமது உண்மையான நியாயமான நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்!

நான் எதையும் அதிகமாக விளக்க வர விரும்பவில்லை! தற்போதய நிலையில் அது சாத்தியமும் இல்லை.

மலையக மக்கள் தமது வாழ்க்கையில் இதுவரை ஏதேனுமொரு முன்னேற்றத்தைக் கண்டிருந்தால் தாராளமாக உங்கள் மனச் சாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள்!

வடக்கின் பிரதானமான நகரங்களில் இரண்டான யாழ்ப்பாண மாநகரமும், வவுனியா நகரமும் இதுவரை என்ன முன்னேற்றத்தைக் கண்டன! இப்போது யுத்தத்தை வெற்றி கொண்ட ஆணவத்தில் - அப்பாவி மக்களை கம்பி வேலிகளுக்குள் வைத்துக் கொண்டு – சிறுபான்மை இனம் என்ற ஒரு சாராரே இல்லை - இவர்கள் கேட்பதைக் கொடுக்க முடியாது – எதை எப்போது கொடுக்க வேண்டும் எனச் சொல்லிய ஜனாதிபதியின் தற்போதைய அரசின் முழு எதிர்பார்ப்பும் கிடைக்கவிருக்கின்ற உலகவங்கியின் நிதிதான். உலகை ஏமாற்றும் அதனோடு வாய்சவால்விடும் அரசுக்கு - பழையதை சுலபமாக மறந்து விட தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்றும் …. இல்லை! எழுதிய ஒப்பந்தங்களுக்கு நடந்த கதி யாவரும் அறிவர்! சொல்லும் வாக்குறுதிகளை நம்ப நாம் தயாராக இல்லை! சட்டமாக்குங்கள் பின்னர் பார்க்கலாம்! அதையும் நம்ப முடியாது – சில சட்டங்களும் கிடப்பிலேதான்!
இன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைச்சர்கள் விஜயம் - சாதாரண தேர்தல் ஒன்றுக்கு எத்தனை செலவு? இவற்றை அறிவிருப்போர் அந்த அபலையான மக்களின் தேவைக்குப் பயன்படுத்தலாமே! அறிவுடன் யாரிருக்கின்றாரோ – நானறியேன் பராபரனே!

No comments: