மதிப்புக்குரிய கல்வி அமைச்சர் கௌரவ சுசில் பிரேம்ஜயந்த MP அவர்களுக்கு,
வணக்கம்.
வறக்காப்பொலை கிராம வீதியைச் சேர்ந்த பீ. பெருமாள் குமார் என்பவர் தனது 2ஆவது வகுப்பில் கல்வி பயிலும் மகனுக்கு வகுப்பாசிரியரும் அவரது சக மாணவர்களும் கொடுத்தவந்த தொல்லைகள் - துன்பங்கள் காரணமாக வேறுபாடசாலையில் சேர்க்க அனுமதிகேட்டு மறுக்கப்பட்ட நிலையில் நஞ்சருந்தி தற்கொலை செய்தமை தொடர்பாக இன்றைய தினக்குரலின் 8ஆம் பக்கத்தில் வெளிவந்த செய்தியைக் கண்ணுற்று இக்கடிதத்தை எழுதுகிறேன்.
நாட்டின் அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டதாகவே இப்பிரச்சனையை அணுக முடியும். கல்வி அமைச்சர் என்ற வகையில் தாங்கள் இதுபற்றிய விசாரணையை உடனடியாக மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் நியாயத்தின்பேரால் தங்களை வேண்டுகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
தங்க. முகுந்தன்.
07.07.2009
பிரதி – கௌரவ எம். சச்சிதானந்தன் பா.உ அவர்கள் பிரதிக் கல்வி அமைச்சர். - ஒரு தமிழருக்கு இப்படியான அநீதி நடந்திருக்கிறது. இதற்கு தயவுசெய்து நியாயமான தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கின்றேன்.
Tuesday, July 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவருக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment