அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, July 12, 2009

மலையக இடதுசாரி முன்னணியின் தலைவருடைய கடிதத்துக்கு நீதி கிடைக்குமா?

வறக்காப்பொலையில் நஞ்சருந்தி மரணமான இரண்டாம் வகுப்பு மாணவனின் தந்தையின் செய்தியை கிருத்தியமும் பிரசுரித்தது. நேற்று இதுபற்றி கல்வி அமைச்சருக்கும் இதேபோல பிரதிக் கல்வி அமைச்சருக்கும் மலையக இடதுசாரி முன்னணியின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் அவர்கள் நீதி விசாரணை வேண்டிக் கோரியிருப்பதுடன் மாணவன் டில்சான் குமாருக்கு கல்வி தொடர வழிசமைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். செய்தி விபரம் கீழே!

மலையக இடதுசாரி முன்னணியின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். இந்தச் செய்தி கிடைத்தவுடனேயே இதுபற்றி ஒரு சிலருடன் தொடர்பு கொண்ட போதிலும் இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வேதனையைத் தருகிறது!
நன்றி - தினக்குரல்

No comments: