Monday, July 27, 2009
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லைக் கந்தன் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
கடந்த Sunday August 10, 2008 இல் இராமகிருஷ்ண மிஷன் துறவி ஸ்ரீ ஆத்மகணானந்த மகாராஜ் அவர்களைப் பற்றி நான் பதிவிட்ட கட்டுரையில் 12.10.2006 திகதிக் கடிதமொன்றின் கடைசியில் எழுதியதை மீளக் குறிப்பிட விரும்புகின்றேன்! அடியேன் சிலவேளைகளில் ஏதேனும் நல்ல விடயங்களை நினைத்தால் ஏதோ ஒரு விதமாக அது நடைபெறுவது இயல்பாகும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பதுபோல் அடியேன் தற்போதைய வாழ்க்கையில் நித்திரையைத் தவிர்த்தே வந்து கொண்டிருக்கின்றேன். உறக்கத்திற்குப் போனால் நாட்டில் நிலவும் பிரச்சனைகளே வந்து மனதை வேதனைப்படுத்துகின்றது என்று எழுதியிருந்தேன்.
மேலும் கடந்த திருவிழாவுக்கு எழுதிய ஒரு கட்டுரையில்
எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீயுமான முருகா எனது மனக்கவலைகளை நீக்கி அருள்புரிவாயாக என்று மன்றாடி மனதால் பிரார்த்திக்கின்றேன்.
உமையாள் குமரா மறைநாயகா சற்குருநாதா குலிசாயுதா குஞ்சரவா சிவயோகா – உன் தாழ் பணிந்து வேண்டுகிறேன் எம் மக்களின் இடரை அகற்றி நல்வாழ்வைத் தருவாயாக!!!
மதிகெட்டு அறத்தை மறந்து வீணான ஆசைகளால் மனம் மயங்கி எம் மக்கள் படும் அவலத்தை எவ்வாறு நீ பார்த்துக் கொண்டு எதுவுமே செய்யாமல் இருக்கிறாய்?
மின்னும் கதிர்வேல் விகிர்தா! நினைவார் கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே – எம் மக்கள் படாதபாடுபட்டுவிட்டார்கள்.
தமிழ் மக்கள் வாழ்ந்த அந்த உயர்ந்த நிலையை தமிழ்த் தெய்வமே வழங்கி அவர்கள் வீணாகக் கெட்டு அழிய விட்டுவிடாதே!
கங்காநதி பாலனான மயிலேறிய சேவகனை ஞானசக்தி வடிவாகிய வேலின் ரூபத்தில் காணும் கண்கொள்ளாக்காட்சி எப்போது நேரில் எனக்கு நீ அருள்வாய் என ஏங்கிய வண்ணம் மனதால் கடல்கடந்து வாழும் என்போன்ற பல பக்தருக்கு நீ எப்போது கிருபை புரிவாய்.
சாகாது எனையே சரணங்களிலே காத்த வேற்கொடி வீரா என் விண்ணப்பத்தை நீ எப்போது ஏற்றுக் கொள்வாய்.
யோகர் சுவாமிகள் கூறியதுபோல வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே என்ற கூற்று எனக்கு எவ்வளவுதூரம் பொருந்தியது என்பதை நான் சதா நேரமும் நினைந்தவண்ணமிருக்கிறேன்.
இவ் வேண்டுதல்களை ஏற்று மக்களுடைய குறைகளைத் தீர்த்த சிவகுருவே இப்போது இம்முறை இவர்களுக்கு உரிய பாகத்தை நீ வழங்கி இரட்ச்சிக்க வேண்டுமையா!
படங்களுக்காக நன்றி - வீரகேசரி, http://humanityashore-nallurkaavadi.blogspot.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment