அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, July 6, 2009

சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் குருபூசைத் தினம் வெகுவிமரிசையாக நடைபெற்றது

ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் செஞ்சொற்செல்வர் திரு. ஆறுதிருமுருகன் உரைநிகழ்த்துகிறார்.
கீரிமலை ஸ்ரீ நகுலேஸ்வரப் பெருமான் தேவஸ்தான பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் ஆசியுரை வழங்குகிறார்.
அகில இலங்கை இந்து மாமன்றப்பொதுச் செயலாளர் திரு. க.நீலகண்டன் வெளியீட்டுரை நிகழ்த்துகிறார்.
நல்லை ஆதீன இரண்ட குருமகாசன்னிதானம் ஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகளுக்கு தெய்வத் திருமகளின் வாழ்வும் பணிகளும் என்ற அன்னையின் ஞாபகார்த்தமாக இந்து மாமன்றத்தினரால் வெளியிடப்பட்ட நூலின் பிரதியை யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கம் வழங்குகிறார்.
அன்னையின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் வைபவமும் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வும் முதல் இடம்பெற்றன. பல நூற்றுக்கணக்கான அடியார்கள் இந்நிகழ்வில் பங்குபற்றி அன்னையை நினைவு கூர்ந்ததுடன் குருபூசையும் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய அன்னபூரணி மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

நன்றி - தினக்குரல், உதயன்

No comments: