என் வாழ்வில் பல சம்பவங்கள் பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது. இன்று ஜூலை 20ஆந் திகதி - மறக்கமுடியாத இரு நிகழ்வுகள் என் நினைவுக்கு வருகிறது. ஒன்று எனது கட்சியின் தலைவர் உடுப்பிட்டிச் சிங்கம் அமரர் . சிவசிதம்பரம் ஐயா அவர்களுடைய பிறந்த நாள் நினைவு. மற்றது திருமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப் அவர்கள் மறைந்த நாள் நினைவு.
நிறைய விடயங்கள் எழுத வேண்டும் என நினைத்திருந்தாலும் தற்போது எழுத முடியாத நிலை!
கடந்த 16இல் எனது வலதுஉள்ளங்கையில் மரக்குச்சி ஒன்று உள்நுழைந்ததால் இந்த அவதி! பழக்கமில்லா இடதுகையால் தேடிப்பிடித்து தட்டச்சுப்பண்ணவேண்டிய இக்கட்டான நிலை!
ஆனால் நினைவுக்கு வருவதை உடனேயே சொல்லிவிட வேண்டும் என்ற ஒரு ஆசையில் இதைப்பதிவிடுகிறேன்.
2 தடவைகள் கொழும்பு 5 - திம்பிரிகசாய சந்தியில் இயங்கிய எமது கூட்டணி அலுவலகத்திற்கு ஒன்றாகச் சேர்ந்தே வந்தவர்கள் அமரராகிய ஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப் அவர்களும் இன்று ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கின்ற ஜனாப் ஏ எச் எம் அஸ்வர் அவர்களும். முதல்முதல் வந்தது பாராளுமன்றத்தில் அதிக நாட்கள் சாவகச்சேரித் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்து கனடாவில் மறைந்த அமரர் வி.என் நவரத்தினம் அவரகளுடைய மறைவின்போது அனுதாபப் புத்தகத்தில் கையொப்பமிட - இதேபோல ஜூலை 5 கொல்லப்பட்ட அமரர் தங்கத்துரை அவர்களுக்கும் அனுதாபப்புத்தகத்தில் கையொப்பமிட வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உண்மையாகவே ஒன்றை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இத் துயரம்மிக்க காலகட்டத்தில் அவசியம். எனக்கு எமது அலுவலகத்தில் வெள்ளை - கறுப்புக் கொடிகள் கட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும், மாலைகளும் - பூக்களும் உருவப் படங்களுக்கும் - புகழுடம்புகளுக்கும் போட்டுப்போட்டே எம் கைகள் தேய்ந்து விட்டன. இதில் இன்று என்னால் அழக்கூடக் கண்ணீரற்ற நிலையில் மனது - நல்லகாலம் இன்னும் கல்லாகவில்லை!
அதிகம் எழுத முடியவில்லை - பத்திரிகைச் செய்தி ஒன்றை மீள் பதிவு செய்கிறேன். இன்னொரு பழைய செய்திஅறிக்கை விரைவில் பின்னர் பதிவிலிடப்படும்.
Monday, July 20, 2009
இன்று 20ஆந் திகதி மறக்கமுடியாத இரு நிகழ்வுகள்! உடுப்பிட்டிச் சிங்கம் பிறந்த நாள் -திருமலை ஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப் மறைந்த நாள்
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அனுதாபங்கள்,
அனுபவம்,
சிவாஐயா,
ஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment