சுவிட்சர்லாந்து சுவிஸ் கூட்டமைப்பு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு. வடக்கில் ஜேர்மனி, மேற்கில் பிரான்சு, தெற்கில் இத்தாலி, கிழக்கில் ஆஸ்திரியா மற்றும் லெய்செஸ்டீன் ஆகிய நாடுகள் சுவிஸின் எல்லைகளாக உள்ளன. சுவிஸ் வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது. உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட நாடாக ஸ்விட்சர்லாந்து விளங்குகிறது. இங்கு அரசமொழிகளாக ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலியம், உரோமாஞ்சு ஆகிய மொழிகள் உள்ளன. உலகில் நிலத்தினால் சூழப்பட்ட 43 நாடுகளில் ஸ்விட்சலாந்தும் ஒன்றாகும். இதன் தலைநகரம் பேர்ண். மிகப்பெரிய நகர் சூரிச் ஆகும். பேர்ண் சமஷ்டி அமைப்புகளின் தலைநகராகவுள்ள போதிலும் சூரிச் வர்த்த உலகில் அறியப்பட்ட நகரங்களாகவும் உள்ளன. அனைத்துலகத் தொண்டு நிறுவனமான உலக செஞ்சிலுவை சங்கம், உலக வர்த்தக அமைப்பு, ஐக்கிய நாடுகளின் காரியாலயம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஐ.நா காரியாலயம் அந்நாட்டில் இருந்தபோதிலும் 2002ம் ஆண்டுவரை இதில் இணைந்திராத போதிலும் நார்ஷனல் லீக்கின் (தேசிய நல்லிணக்கசபை) உறுப்பு நாடக ஆரம்பத்திலிருந்தும் வந்துள்ளது,
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக 1990இல் ஸ்விட்சர்லாந்தில் நடாத்தப்பட்ட அனைத்து மக்கள் வாக்கெடுப்பு தோல்வியுற்றதால் அதில் இணையும் அந்தஸ்து இல்லாத நாடாகவும் உள்ளது (ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்திய ஒரே ஒரு நாடு ஸ்விட்சர்லாந்து மட்டுமே). இந் நாடு 1291ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் திகதி விடுதலை அடைந்த செய்தி வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இன்று வரை ஸ்விட்சர்லாந்து ஆகஸ்டு 1ம் நாளை தேசிய விடுமுறையாக கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். ஸ்விட்சர்லாந்து 1848ம் ஆண்டு செப்டெம்பர் 12ம் நாளில் இருந்து இன்றைய காலம் வரையுள்ள நடைமுறைக்கு வந்த சமஷ்டி கட்டமைப்பின் இடையில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1291இல் விடுதலை அடைந்த போதிலும் இன்றைய மத்திய ஸ்விட்சர்லாந்து நிலப்பகுதியை மட்டுமே நிலப்பரப்பாக கொண்டிருந்தது. பின்பு நாளடைவில் நில அபகரிப்பு காலம் காலமாக நடாத்தப்பட்டு 1848ல் எல்லைகள் வரையப்பட்ட பரந்த நவீன ஸ்விட்சர்லாந்து தோன்றியது.
ஸ்விட்சர்லாந்தின் மொத்த நிலப்பரப்பு 41,285 சதுர கிலோமீட்டர் (15,940 சதுர மைல்கள்) களாகும். இது மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது பரப்பளவில் 136ம் இடத்தில் உள்ளதுடன் அந்நாட்டின் நீர்ப்பரப்பு நிலப்பரப்புடன் ஒப்பிடும் பொழுது 4.2% மாகவும் உள்ளது. சுவிஸ் நாடானது எல்லைகளாக பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஆஸ்திரியா, இலித்துவேனியா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நீண்ட காலமாக நடுநிலையைக் கடைப்பிடித்து வரும் சுவிஸ் 1815ல் இருந்து எந்த போரையும் சந்திக்கவும் இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.1291ல் சுதந்திரமடைந்த சுவிஸ் 1499ம் ஆண்டு 22 செப்டெம்பரில் அங்கீகாரமற்ற கட்டமைப்புடன் ஆட்சி செய்த போதிலும் 1648ம் வருடம் ஒக்டோபர் 24ல் அங்கீகரிக்கப்பட்டது.
பின்பு 1798ல் பிரஞ்சு நாட்டின் படையெடுப்பினால் சிறிது காலம் ஆட்சி மாறி நெப்போலியன் வீழ்ச்சி வரை பலரது ஆலோசனைகளையும் உள்ளடக்கியதான இன்றய ஸ்விட்சலாந்து கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தது. 1815ம் வருடம் ஆகஸ்டு 7ம் நாள் நடைமுறைக்கு வந்த அமைப்பு முன்பு இருந்த "கன்டொன்" (இலத்தீன் மொழியில் துணை நிலப் பிரிவுகளைக் குறிப்பதாகும்) அமைப்பை அடிப்படையாக கொண்டிருந்ததாகும். 1884ல் உருவான சமஷ்டி ஆட்சி மூலமாக 26 கன்டொன்கள் அமைக்கப்பட்டதுடன் இரு நாடளுமன்ற அமைப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இரண்டு நாடாளுமன்றங்களில் ஒன்று கன்டொன் உறுப்பினர்களை (46 உறுப்பினர்) பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மற்றதில் தேசிய அளவில் (200 உறுப்பினர்கள்) மக்கள் தெரிவின் மூலமாக நியமிக்கப்படுவர். இந்த கன்டொன் அமைப்பானது சமஷ்டித் திட்டத்தில் 1848இல் சேர்க்கப்படு முன்பாகவே முன்னய ஆட்சிகளில் இதை ஒத்த அமைப்பு 700 வருடங்களாக இருந்தமை குறிப்பிடத்தக்க வரலாறு. கன்டொன்கள் ஒவ்வொன்றும் சுயமாக ஆட்சி செய்யும் அமைப்பு சமஷ்டித் திட்டத்தில் உள்ளபோதிலும் இவைகள் மத்திய நாடாளுமன்றத்தில் அவ்வப்போது கூடுகிறன. இந் நாட்டின் அரசியல் யாப்பின்படி சட்டம், ஒழுங்கு (பாதுகாப்பு), வெளி விவகாரம், பொருளாதாரம், நாணயம், ஆகிய விடயங்களில் சுயநிர்ணயம் இருந்த போதிலும் பொது நாணயத்தை 1850ல் இருந்து ஸ்விட்சர்லாந்து கடைப்பிடிக்கின்றது. 2005ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஸ்விட்சர்லாந்தின் மொத்த தேசிய வருமானம் $264.1 பில்லியன்களாகவும் (இது உலகின் 39ம் இடம்) சனத்தொகை 7,2888,010 ஆகவும் (அண்ணளவாக7.3 மில்லியன்கள்) இருந்தது. 2006 ஆண்டுக் கணக்கெடுப்பில் சனத்தொகை 7.5 மில்லியன்களாகவும் தனிமனித வருமானம் $32,300 ஆகவும் உள்ளது. இது உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது 10ம் இடத்தில் இருப்பது ஸ்விட்சர்லாந்தின் சிறப்புக்குச் சான்றாகும்.
தகவல் - விக்கிபேடியா
Friday, July 31, 2009
(நாளை) ஆகஸ்ட் 1ம் திகதி விடுதலை அடைந்த ஸ்விட்சர்லாந்து!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
சுவிற்சர்லாந்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment