அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, July 13, 2009

மறைந்த எமது குடும்பத் தலைவர் - வழிகாட்டி - ஆசான் - பலராலும் இன்றும் நினைவு கொள்ளப்படும் ஒப்பற்ற மக்கள் சேவகனுக்கு எமது மாறாத கண்ணீரஞ்சலிகள்!


திக்கற்றவர்களாக நாம் தவிக்கிறோம்!
இதுதான் என்னால் இப்போது சொல்லத் தக்கதான வார்த்தை!
யாருக்கு இல்லாவிட்டாலும் எமக்காக(எங்கள் குடும்பத்தவருக்காக)நீங்கள் இருந்திருக்கலாமே!
நீங்கள் கொல்லப்பட்டு 20 வருடங்கள் ஓடிவிட்டன! ஆனால்
நீங்கள் எங்களுடனேயே வழிகாட்டியாக இருப்பதாக நாம் உணர்கிறோம்!
கடந்த செப்டெம்பர் 20இல் நான் குறிப்பிட்ட 1985 - ஆலால் தர்மர் நினைவுக் கூட்டத்தில் நீங்கள் பேசியதை அப்படியே பதிவிலிடுகிறேன்.

சிலர் தமிழர் விடுதலைக் கூட்டணிலைப் பயப்படுத்த இக்கொலை செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதனைக் கண்டு நாம் பின்வாங்குவோம் என்று கூறினால் நாம் எப்பவோ ஒதுங்கியிருப்போம். 1972ஆம் ஆண்டு, சிங்கக் கொடியை எரித்த இளைஞர்களைத் துரத்தி வந்த பொலிஸ்காரனைத் தடுத்து சேட் பட்டனைக் கழற்றி என் நெஞ்சைக் காட்டி இயலுமானால் சுட்டுவிட்டுப் போ என்று தெரிவித்தவன் நான். நாங்கள், என்று விடுதலைக் களத்தில் இறங்கினோமோ அன்றே மரணம் வரும் என்றுதான் இறங்கினோம். எனக்கு ஏதும் நடந்தால் என் தொல்லை முடிந்தது என்று போய்விடுவேன். எனக்கு என்ன நட்டம்? தர்மலிங்கம் மரணித்துவிட்டார். அவருக்கு என்ன நட்டம்? ஆலாலசுந்தரத்துக்கு என்ன நட்டம்? மரணத்தைக் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி எம்மை வெருட்ட நினைக்கக் கூடாது. அங்கே யாழ்ப்பாணத்தில் இலட்சியத்தைக் கடந்து வெறியாட்ட நிலை நடக்கிறது.

இன்று வெறியாட்டம் வன்னி முகாம்களில்! என்ன செய்வதென தெரியவில்லை!
நீங்கள் இருந்திருந்தால் ........

No comments: