Thursday, July 9, 2009
அதிசயம் ஆனால் உண்மை - நடேசர் சிலையைக் காணவில்லையாம்! குரல் கொடுக்கிறது JVP
ஆடு நனைகிறதென்று ஓநாய் கவலைப்பட்டதாம் என்றொரு பழமொழி இருக்கிறது! அதுபோல தமிழர்களுடைய உரிமைகளை வழங்க முட்டுக்கட்டையாக இருக்கும் JVP இப்படிச் சொல்லியிருப்பது ஒரு புதினம்தான்!
நடராஜர் சிலை என்றதும்தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! கடந்த 2002 நவம்பரில் திகதி சரியாக ஞாபகம் இல்லை - இந்த நடராஜரைப் பற்றிக் குறிப்படா விட்டாலும் (இது பொலநறுவைச் சிவன்கோவில் விக்கிரமாகத்தான் இருக்க வேண்டும்) அரிய சிலைகள் மற்றும் கலை வடிவங்கள் திருடப்பட்டுவருவது பற்றி நான் ஒரு செய்தியைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். அதை தினக்குரல் பிரசுரித்தது. பதிவுக்காக அதையும் இவ்விடத்தில் சேர்ப்பது நல்லதெனக் கருதி இணைக்கின்றேன். இந்தச் செய்தியை எழுதுவதற்கு கீரிமலை நகுலேஸ்வரக்குருக்கள் ஐயா மாத்திரமல்ல - தினக்குரல் செய்தியும் இதைவிட முக்கியமாக நாம் கொழும்பில் இருக்கும் எமது தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்துக்கு அண்மையில் இருக்கும் வீடொன்றில் பழைய காலத்து குதிரை வாகனம் ஒன்றைக் கண்டேன். கொள்ளுப்பிட்டி அல்விஸ் பிளேஸில் உள்ள இந்த வீடு ஒரு களியாட்ட விடுதி வைத்திருக்கும் ஒருவருடையதாகும். அதன்பிறகே இச்செய்தியை அனுப்பினேன். இதில் ஒரு பிரயோசனம் கிடைத்தது என்னவென்றால் என்னுடைய கதெத்தின் பிறகுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்புக்கு செல்பவர்களை மாத்திரமல்ல யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் அனைவரையும் சோதித்து அறிய ஒரு சோதனைச் சாவடியை அமைத்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment