பதிவர்கள் எல்லோருக்கும் எவ்வாறு தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் தாற்பரியம் இருக்கிறதோ அதைப் போலவே வாசகர்களாகிய பொதுமக்களுக்கும் தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையும் விமர்சிக்கும் உரிமையும் இருக்கிறது! இதில் கோபமடையும் பதிவர்கள் அறிவற்றவர்களே! அறிவுடையவன் மனிதனாக வாழ விரும்புவான், மனிதத்துவத்துடன் நடந்து கொள்வான் - என்பது எனது அறிவுக்கு எட்டிய உண்மை!
இன்றைக்குப் பதிவர்கள் பலர் இலங்கையில் என்ன நடக்கிறது - என்ன நடந்தது என்று அறியாமல் தமது எண்ணத்துக்கு எழுதும் - குதர்க்கமான - அறிவற்ற தனமான - பதிவுகளை இட்டுவருவது வருத்தத்திற்குரியதே! ஒரு நாளைக்கு குறைந்தது 2 தடவையாவது நாட்டின் எப்பகுதிக்கோ கண்டிப்பாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளுபவன் என்ற வகையில் இன்றைய மிக இக்கட்டான நிலையில் இதை பதிவிட விரும்புகிறேன். கடந்த கால சம்பவங்களை விடுத்து இன்றைய மிக மொசமான நிலையில் இருக்கும் எமது வன்னி மக்கள் படும் அவலத்தை எவருமே கவனத்தில் எடுக்காமல் இருப்பதே எனக்குப் பெரிய வேதனை!
ஆயுதப் போராட்டம் இன்று நசுக்கப்பட்டு முடிவடைந்த நிலையில்(இப்படியான ஒரு கருத்துப்பட இன்று ஏகப்பிரதிநிதிகளின் வால்களாக தேர்தலில் போட்டியிட்ட சம்பந்தனே சொல்லியிருக்கும் நிலையில் ) மக்களை நட்டாற்றில் கொண்டு வந்து விட்டுவிட்ட இவர்கள் நாடு கடந்த அரசு அமைக்கும் பணியில் மேலும் தமது போராட்டங்களைத் தொடங்க இருக்கிறார்கள்!
துப்பாக்கிகளை மாத்திரம் நம்பியிருந்தவர்களை முற்றாக நம்பிய வன்னி மக்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இப்போது படும் அல்லற்படும் நிலைக்கும் அவர்கள் வன்னியில் பத்தோடு பதினொன்றாக செத்திருப்பதுமேல்!
285,000க்கும் அதிகமான மக்கள் எதற்காக ஏன் இப்படி அல்லல்பட வேண்டி வந்தது என்பதை எவருமே ஆராயாமல் இவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய 2 பகுதினரையும் விமர்சித்தும் பாராட்டியும் எழுதும் ஊடகங்களும் சரி பதிவர்களும்சரி விடுதலைப் புலிகளின் அநீதியான செய்கையைக் கண்டிக்காமல் சும்மா புகழ்பாடுவதிலும் வீரப்பிரதாபங்களை எழுதுவதிலும் தமது சக்தியைச் செலுத்துவதுதான் வேதனை! இதை நான் குறிப்பிடுகிறேன் என்பதால் என்னை அரச உளவுக்காரன் என்று நீங்கள் கருதினால் நான் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது - எனது பழைய இடுகைகளை மட்டும் பாருங்கள் என்றுதான் சொல்ல முடியும்.
(மீதி நாளை தொடரும்)
Sunday, July 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment