அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, July 5, 2009

வாழ்வுறுக உன் எண்ணம்! – அண்ணாதாசன்

09.07.1997 புதன்கிழமை திருமலை நகர சபையிலே நடைபெற்ற அமரர் அ. தங்கத்துரை பா.உ அவர்களின் இறுதிச் சடங்கின்போது வாசிக்கப்ட்ட இரங்கல் கவி.

சாய்ந்து கிடக்கும் சரித்திரமே!
உன் கரங்கள் ஓய்ந்து விடக் காலன் உபாயம் தான் செய்தானோ?
வேய்ந்து வைத்த வீட்டின் முகடே!
விடா மழையில் வாழ்ந்திருக்கும் தமிழர் வகையென்ன காண்பாரோ?
புன் சிரிப்பும் உந்தன் புருவ நெளிப்பும் - தம்பி என்றழைக்கும் நாவும் நடிப்பில்லா உன்நெஞ்சும் ஆய்ந்தளந்து பார்க்கும் அறிவின் பிறப்பிடமும்ஓய்ந்து கிடப்பதெல்லாம் உறக்கமாய்ப் போகாதா?
அளந்தளந்து பேசும் அண்ணா!
உனை நாங்கள்இழந்து விட என்னஎன்ன குறை செய்தோம்?
தானம்……. உனது தமிழில் நிதானம் ….. மாற்றார் மானத்தைத் தூண்டாது மதி தூண்டும் மாண்புனக்கு!
எண்ணி எண்ணிச் செய்வாய்!
எடுத்தெறிந்து பேசாதுநுண்ணியதாய் ஆய்ந்துநூதனங்கள் புரிவாய் நீ!
மக்களின் வாழ்வில் மகத்துவங்கள் செய்வதற்காய் எக் களைப்பும் பாராது இயங்குபவன் நீ … உனது தாழ்ந்த திருமலையைத்தரமுயர்த்த என்று …. பகல் ஆழ்ந்துறங்கும் இரவெல்லாம் அரும்பணிகள் செய்பவன் நீ!
திறைசேரிப் பூதம் திரு திரெனக் காத்தாலும்முறையாகக் கோரிமுழுப்பங்கும் - அதன் மேலும் குறையாமற் பெற்று குழி விழுந்த துறையெல்லாம் நிறைவாகச் செய்ய நித்தம் உழைப்போன் நீ!
தமிழர் வரலாறு தணியாத தீயாறு புழுவாய் தமிழ்மக்கள் பொசுங்கிப் போகாவாறு வழி காணுமாறுவகை செய்யும் போதெல்லாம் பங்காளியாகிப் பாங்கோடு வாதாடிஎங்கள் நிலம் - வாழ்வுஏற்றம் … இவையெல்லாம் அங்குலமும் போகாது அளந்தளந்து பெற்றிடவேநீதி சமாதானம் நிகரான வாழ்வுதனைக் கோரி உழைக்கும் கொள்கை வழி நிற்போன் நீ!
செல்வா வகுத்த செயல் வழியிலே நின்று ஐயா … உழைத்தாய்!அரும்பாடு பட்டாய் …நீ!பொய்யாய் உறங்கித்தான் போயுள்ளாய் - உன் புருவம் நெளிக! சிரிப்பு நிமிர்ந்திடுக!நீ …. எழுக!அரிதின் அரிதான ஆணிப் பொன்னே…அண்ணா!
துரையே எழுக!தூக்கம் கலைந்திடுக!அழியாது ஆன்மா!அண்ணா நீயோ அரிமா!எம்மோடிருக்கின்றாய்!என்றும் இருப்பாய்! … நீ!வாழ்க திருநாமம்!வாழ்வுறுக உன் எண்ணம்!

No comments: