அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, July 1, 2009

இலங்கை (ஈழம்) - தமிழீழம் - போராட்டம்! ஆறறிவுடைய மனித இனத்திற்கு ஒரு மனிதாபிமான வேண்டுகோள்! – சிந்தித்துச் செயற்படுங்கள்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே! இதை நான் சொல்லவில்லை – புரட்சிக் கவிஞர் பாரதி பாடியது!

செய்திகளைப் பார்க்கும் போது சிரிப்பதா? அழுவதா? யார் மீது குற்றம் காண்பது! யாரைப் பாராட்டுவது! என்று குழம்பியிருக்கும் எனக்குப் பொதுப்படையாக ஏதாவது எழுதவேண்டுமெனத் தோன்றியதால் இதைப் பதிவிலிடுகிறேன்! குற்றம் சொல்பவர்கள் சொல்லட்டும்! வாழும் அடிப்படை மனித உரிமையின் பெயராலேயே இக்கட்டுரை முன்வைக்கப்படுகிறது.

சகல வசதிகளுடனும் வாழ்ந்த வடக்குக் கிழக்குப் பகுதி மக்களில் இன்று பாதிப்பேருக்குமேல் தமது சொந்த இடங்களை விட்டு வேறு இடங்களில் வாழும் நிலை! அது புலம் பெயர்ந்திருக்கலாம் - நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருக்கலாம் - கடைசியாக எந்தவிதமான அடிப்படை வசதியற்ற நிலையில் முட்கம்பிகளுக்குள் வவுனியாப் பகுதியிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் வன்னியில் இருந்து கடந்த ஓரிரு மாதங்களில் வெளியான அப்பாவி மக்களாயிருக்கலாம் - 1990 களில் அடித்தவிரட்டப்பட்ட இன்றும் மேற்சொன்னவர்களைக் காட்டிலும் மிகக்கீழ்த்தரமான நிலையிலுள்ள புத்தளம் வெறும் வெளிகளில் வாழும் முஸ்லிம்களாயிருக்கலாம் - ஏன் 100 அல்லது 200 வருடங்களுக்கு முன்னர் கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்ட மலையகத்திலும் நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களாயிருக்கலாம் - இவர்களைப் பற்றிய உண்மையான கரிகனையுடையவனாக நான் ஒருவனே இருக்க முடியும்! ஆனால் நானோ அகதியாக நாட்டைவிட்டு வெளியேறி இங்கும் அவர்களைப்பற்றிச் சிந்தித்தபடி ஒரு பைத்தியக்காரனாக மட்டுமே வாழ முடிகிறது! இதனால்தான் இன்று பகிரங்கமாக இக்கட்டுரையை வெளியிட முடிவுசெய்தேன்.

மலையகத்திலுள்ள மக்களின் நிலைதான் முதற்பிரச்சனை என்ற வழக்கு இப்போது 2வது கட்டமாகியிருக்கிறது – காரணம் அவர்களுக்கு இருக்க ஒரு லயமாவது இருக்கிறது! ஆனால் வடக்குக் கிழக்கு மாகாண மக்களில் பலருக்கு தற்போதைய சு10ழ்நிலையில் அது யாழ்ப்பாண புகையிரத நிலையங்களில் வாழும் மக்களில் இருந்து புத்தளத்தில் (தற்போது வன்னியில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பானவர்கள் கொடுக்கும் கொட்டகையில்) வாழும் முஸ்லிம்களும் கிழக்கில் இடம்பெயர்ந்து இன்றும் அநாதரவாக இருக்கம் மக்களும் மிகவும் அடிப்படை உரிமையின்றியவர்களே! இதற்காக நான் நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் ஏன் கொழும்பு போன்ற இடங்களில் பெட்டிபோன்ற அமைப்புடைய அதுவும் அரச அனுமதியின்றி வாழும் மிகவும் ஏழ்மைப்பட்ட மக்களின் வாழ்க்கையை அவர்கள் படும் துன்பங்களை அறிந்தவன் - அவர்களோடு அன்னியோன்னியமாகப் பழகியவன் என்ற முறையிலும்தான் இந்த நேரத்தில் சில முக்கிய விடயங்களைப்பற்றி அலசி ஆராயவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். இது தமிழ்ப் பேசும் மக்களின் நிலை என்றால் அப்பாவிச் சிங்களப் பொதுமக்களில் பலரும் இவர்களைப்போலவே நாட்டின் சகல பதிகளிலும் வாழ்ந்த வருவதும் குறிப்பிடத் தக்கது. குறிப்பாக களனி கங்கைக்கு அருகில் கொழும்பு மாவட்ட எல்லையில் இம்மக்கள் வெள்ளம்வரும்போது படும்பாடு யாரும் அறியமுடியாது! இது நீர்கொழும்பு மற்றும் இதர தெற்குப் பகுதிகளில் நடைபெறுவது வருடாந்த நிகழ்வுகள்.

Summary of the 1977 Sri Lankan parliamentary election
Parties - Votes - Seats
United National Party - 3,179,221 - 140
Tamil United Liberation Front - 421,488 - 18
Sri Lanka Freedom Party - 1,855,331 - 8
Ceylon Workers' Congress - 62,707 - 1
Lanka Sama Samaja Party - 225.317 - 0
Communist Party - 123,856 - 0
Mahajana Eksath Peramuna - 22,639 - 0
Others - 353,014 - 1
Totals - 6,243,573 - 168

நாம் வடக்குக் கிழக்கில் இருந்தவர்கள் மிகச் சிறப்பாக வாழ்ந்தவர்கள். இதை யாரும் மறக்க முடியாது! நான் ஏற்கனவே எனது வலைப்பதிவில் சில விடங்களைக் குறிப்பிட்டாலும் 1977இல் தமிழீழக் கொள்கையை முன்னிறுத்தி வடக்கக் கிழக்கில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்த தமிழர் விடுதலைக் கூட்டணி இரண்டாவது கட்சியாகப் பாராளுமன்றத்தில் தெரிவானதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவன் நான். இப்போது ஐக்கியதேசியக்கட்சி இதன் பின்னர் 22.12.1982இல் பாராளுமன்றத்தின் கால எல்லையை நீட்டும் சர்வசன வாக்கெடுப்பு நடந்ததது. 1983இல் இது ஜனநாயகக் கொள்கைக்கு மாறானது என்று சொல்லி கூட்டணி உறுப்பினர்கள் இராஜினாமாச் செய்ய 3வது கட்சியாக 8 உறுப்பினர்களைக் கொண்டிருந்த சுதந்திரக்கட்சி எதிர்கட்சியானது. திருமதி பண்டாரநாயக்காவின் குடியுரிமையை ஐக்கிய தேசியக் கட்சி பறித்ததால் அவரது மகன் அனுரா பண்டாரநாயக்கா எதிர்க்கட்சித்தலைவரானார்.இதன் பின்னர்தான் ஆயுத இயக்கங்கள் வளர்ச்சி கண்டன.

ACTC– All Ceylon Tamil Congress (1944), founded by G.G.Ponnambalam who remained its leader until his death in 1977; then the leadership was held by his son G.G.(Kumar) Ponnambalam Jr. until his assassination in 2000.
CWC – Ceylon Workers Congress (1947) of Saumiyamoorthi Thondaman, re-named from Ceylon Indian Congress (CIC; 1939). A reluctant partner of the TUF, whose only policy principle since 1977 has been opting for plum Cabinet appointments and patronage paraphernalia from any ruling Sinhalese party in power.
DPLF – Democratic People's Liberation Front, the political wing of PLOTE, of D.Siddarthan.
ELDF – Eelam Liberation Defence Front
ELO – Eelam Liberation Organisation (1975)
ELT – Eelam Liberation Tigers
EM – Eagle Movement, of Gnanavel.
ENDLF – Eelam National Democratic Liberation Front (1987), a hotch-potch grouping created by RAW from the malcontents of PLOTE, EPRLF and TELO.
ENLF – Eelam National Liberation Front (1985-1986), a short-lived union of the LTTE, EROS, TELO and EPRLF. Feeling the tentacles of Indian manipulation, the LTTE wiggled out of this union promptly.
EPDP – Eelam Peoples Democratic Party (1987) of Douglas Devananda; a splinter group of EPRLF. A one-person band, surviving as an embedded Tamil appendage of the SLA and a client 'political party' of the Defense Ministry.
EPRLF – Eelam People's Revolutionary Liberation Front (1980) of K.Padmanabha and V.Perumal; a splinter group of EROS. Following the decimation of TELO, India's underground agencies worked overtime to make EPRLF dance to their tunes. As Taraki noted, "The EPRLF was much better armed and had six times more trained cadre than the Tigers when it was decimated in November 1986." By opting to be an embedded group to the IPKF operations, EPRLF lost whatever remaining credit they had as a military force by 1990.
ERCP – Eelam Revolutionary Communist Party
EROS – Eelam Revolutionary Organisation of Students (1975) of Eliathamby Ratnasabapathi, V.Balakumar, Shankar Raji and Bala Nadaraja Iyer aka Sinna Bala.
ETOM – Eela Thamilar Ottrumai Munnani (1960), of C.Suntheralingam; a one-person band, which became a minor constituent of the TUF.
FP – Federal Party (1949); same as ITAK.
GATE – Guerrilla Army of Tamil Eelam
GUES – General Union of Eelam Students
IFTA – Ilankai Freedom Tamil Army (1984) of E.Saravanabavanandan.
LTTE - Liberation Tigers of Tamil Eelam (1976)
NLFTE – National Liberation Front of Tamil Eelam, which according to Taraki, was a small but influential Maoist group that was based largely in Jaffna, which "drove down the road to perdition by splitting hairs over the question of whether it should first build an armed wing or a mass political movement."
OFERR – Organisation for Eelam Refugee Rehabilitation (1984), of S.C.Chandrahasan.
PFLT – People's Front of Liberation Tigers (1989), now defunct political party of the LTTE.
PLA – People's Liberation Army, the military wing of EPRLF, whose fumbling 'General' was Douglas Devananda. The only record (ignominious, at that) of the PLA was the 1984 kidnapping of American couple Stanley Allen and his wife, Mary Allen from Columbus, Ohio, in Jaffna. See also, EPDP.
PLFT – People's Liberation Front of Tamil Eelam, a splinter group of NLFTE.
PLOTE - People's Liberation Organisation of Tamil Eelam (1980) of Uma Maheswaran. As per the evaluation of its one-time member and journalist Taraki, "PLOTE had six thousand fighters trained in India and about twelve thousand trained in its military camps in the Northeast. Yet in September 1986, the organisation's local commanders were compelled to announce that they were ceasing all their military activities in the Northeast to avoid bloodshed."
PLP – People's Liberation Party
RELO – Revolutionary Eelam Liberation Organisation
RFTE – Red Front of Tamil Eelamists (1984)
SRSL – Socialist Revolutionary Social Liberation
TEA – Tamil Eelam Army (1983), of 'Panagoda' Maheswaran. Now defunct one-person band which made a few crackles in the 1980s.
TEBM – Tamil Eelam Blood Movement
TEC – Tamil Eelam Commando
TEDF – Tamil Eelam Defence Front
TEEF – Tamil Eelam Eagles Front
TELA – Tamil Eelam Liberation Army (1982) of 'Oberoi' Thevan; a splinter group of TELO. Following the assassination of Thevan in 1983, TELA was absorbed by PLOTE.
TELC – Tamil Eelam Liberation Cobras (1983), a short-lived Batticaloa-based group. As per Taraki, "It was widely known as the Cobra Army (Naaha Padai). It did little except call for hartals and send out pre-recorded warnings to those whom it considered traitors. The warnings ended with the hiss of a snake."
TELE – Tamil Eelam Liberation Extremists, which Taraki identified as "led by a crackpot who loved to call himself 'TELE Jegan.' He was shot dead when he began to hit the limelight with a few daredevil antics."
TELF – Tamil Eelam Liberation Front (1982), of S.C.Chandrahasan, M.K.Eelaventhan, journalist Kovai Mahesan and Dr.S.A. Tharmalingam; a splinter group of the TULF.
TELG – Tamil Eelam Liberation Guerrillas
TELO – Tamil Eelam Liberation Organisation (1973), of Thangathurai and Kuttimani (until 1983), and Sri Sabaratnam (until 1986). In Taraki's words, "TELO had the largest stock of weapons of all the armed groups in the Northeast when the LTTE wiped it out in the course of a few days in April 1986. TELO had eight times more fighters than the LTTE. It [also] had India's full backing."
TENA – Tamil Eelam National Army (1983), of Amirthalingam Baheerathan
TERO – Tamil Eelam Revolutionary Organisation, of Sudan Ramesh; a splinter group of TELO.
TERPLA – Tamil Eelam Revolutionary People's Liberation Army, of Thangarasa.
TESO – Tamil Eelam Supporters Organisation, convened by the DMK leader M.Karunanidhi in 1986. A show-case conference was held on May 4, 1986 in Madurai, in which some leading Indian politicians (A.B.Vajpayee, H.N.Bahuguna, N.T. Rama Rao, Upendra, and Subramanian Swamy) participated and hogged the media space.
TESS – Tamil Eelam Security Service
TIC – Tamil Information Centre (1983), the brain-child of attorney K. Kanthasamy and journalist S. Sivanayagam, and located in Madras (Chennai). An organization of the same name was also located in London for a number of years subsequently under different leadership.
TLO – Tamil Liberation Organisation (1969), the progenitor of TELO.
TNA – Tamil National Alliance (2001), the lead political party of Eelam Tamils comprising ITAK, ACTC, TELO and EPRLF (Suresh faction), led by R.Sampanthan. See also TULF.
TNA – Tamil National Army (1989-1990), the ill-conceived brain-child of India's policy mandarins and intelligence hands, which could survive only on artificial respiration.
TNC – Tamil National Council (1989)
TNT – Tamil New Tigers (1972-1976); renamed the LTTE.
TPCU – Tamil People's Command Unit
TPDF – Tamil People's Democratic Front
TPSF – Tamil People's Security Front
TPSO – Tamil People's Security Organisation
TRRO – Tamil Refugees Rehabilitation Organisation (1977), the livewire of which was trade unionist K.C. Nithyanantha.
TS – Three Stars (interpreted as representing the three ethnic groups in Sri Lanka), an embedded para-military grouping which received news mention during the IPKF operations (1987-89). see ENDLF.
TSK – Tamilar Suya-Aadchi Kazhakam (1969), of V. Navaratnam; a splinter group of ITAK.
TSL – Tamil Students League [Tamil Manavar Peravai] (1970), founded by Ponnuthurai Satyaseelan. See also, TYL.
TUF – Tamil United Front (1972-1976), formed with the elderly triumvirate leadership (S.J.V.Chelvanayakam, G.G.Ponnambalam and S.Thondaman).; re-named TULF.
TULF – Tamil United Liberation Front (1976). The deaths of indigenous Tamil leaders Ponnambalam (in Feb.1977) and Chelvanayakam (in April 1977), combined with Indian-Tamil leader Thondaman's aspiration for a Cabinet Minister position, saw the leadership batton passing into the hands of the next generation of triumvirate leadership of A. Amirthalingam, M. Sivasithamparam and R. Sampanthan. Sivasithamparam served as the nominal head until his death in 2002. Since early 2004, V.Anandasangaree claims the current leadership of a rump TULF, though discredited by the Tamil voters who have moved their allegiance to the TNA (2001).
TYL – Tamil Youth League
UDI – Unilateral Declaration of Independence (1990), a farcical act enacted by V. Perumal of the EPRLF as head of the NEPG, who then fled from Trincomalee.
( தமிழ் அமைப்புக்கள் பற்றிய தகவலுக்காக - http://sangam.org/taraki/articles/2006/05-05_LTTE_30th.php?uid=1720) (சங்கம் பதிவினருக்கு நன்றிகள்)

இன்று ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டவர்களாலேயே(?) வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத்தான் பாதுகாப்புப் பிரச்சனை என்றால் இன்று ஒரு பத்திரிகைக்கம் பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய நிலையில் எம் நாட்டின் அரசியல் நிலை!

யாரொடு நோகேன் யார்க்கெடுத்து உரைப்பேன்! என்று மாணிக்கவாசகரும்

மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாயிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாழாங்கிருப்பீர் திருவாருரீர் வாழ்ந்த போதீரே! ஏன்று சுந்தரரும் சொல்லிய பாடலை நினைவு படுத்துவது எனக்குப் பொருத்தமாயிருக்கும் என்று கருதுகிறேன்.

நாசமாய் போவான்கள் என்று அண்மையில் ஒரு கட்டுரையைப் பார்த்தேன். எனக்கும் சில பழைய ஞாபகங்கள் வந்து போனது!

இறுதியாக இன்று தமிழகத் தலைவர்கள் பலரும் சில சினிமாக்காரர்களும் ஏன் கவிஞர்களும் மிகமிக உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதைப் பார்த்தால் எனக்கு அழுவதா சிரிப்பதா என்ற தெரியவில்லை! ஏனெனில் இங்கு நம்நாட்டில் பேசிய பலர் துரோகிகளானார்கள் - பேசிய பலரில் சிலர் (மாவை சேனாதிராசா, காசி ஆனந்தன்) இன்று மௌனிகளாக இருக்கம் போது இவர்கள் என்ன ….?

இப்போது அரசில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்று தமிழருக்கு சாப்பாடும் - இருப்பிடமும் கொடுத்தால் போதும் என்று சொல்கிறது!

முக்கட்சிக் கூட்டணியில் இறுதிநேரத்தில் ஒன்றுபட்டுத் தேர்தலில் போட்டியிடும் முடிவு ஏற்பட்ட பிறகு கூட்டணி தனியாக வவுனியாவில் வேட்புமனு சமர்ப்பித்து மூக்குடைபட்டதும் ஏன் என்று தெரியவில்லை!

தமது பாராளுமன்ற உறுப்பினர் காவலில் - தமக்கு வாக்களித்த மக்கள் கம்பிவேலிக்குப் பின்னால் - இதில் அடுத்த தேர்தலுக்காக – மக்களை ஏமாற்ற முனையும் கூத்துக்காரர்!

வழமைபோல பெரிய ஆலமரத்துக்கு செடிகொடியாக ஆலவட்டம் பிடிக்கும் ஏனையோர்!

மீள்குடியேற்றப்பட வேண்டிய முஸ்லிம்களின் அமைப்பின் சுபியானை நான் நினைத்திருந்தேன் கூட்டணியில் சேர்த்திருக்கலாம்! ஆனால் ஏனோ? எங்கோ? தவறு நடந்துவிட்டது அவர் தனியாக …..

யாழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பல்கலைக் கழக மாணவர்கள் இன்று மனமாற்றம் பெற்று ஒரு பொது வேண்டுகோள்!

இதெல்லாம்சரி இதைத்தானே 1970 களில் பல கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்படுத்தின. அதிலிருந்ததானே பின்னர் பிரிந்தன - இன்று மீண்டும் சுத்திச் சுத்திச் சுப்பற்ற கொல்லைக்குள் என்று அகிம்சையில் வந்த நிற்கிறது போராட்டம்!

கொஞ்சம் சிந்தியுங்கள் - எனக்கு இப்போது தலைசுற்றுகிறது – பின்னர் வருகிறேன்!

தங்க. முகுந்தன்

1 comment:

Unknown said...

மனிதாபிமான வேண்டுகோள் எனப் பதிவிட்ட கருத்தியல் நன்றாக உள்ளது, இருப்பினும் தங்களின் அரசியலோடு ஒட்டியுள்ள கூட்டணியை மட்டும் தூக்கிப் பிடிப்பது காத்திரமாக இருக்கவில்லை.

சங்கரி ஈறாக அனைத்து தமிழ் கட்சிகளின் தலைமைகளும் சந்தற்பவாத அரசியல் பண்ணை நடத்துகின்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மக்கள் படும் வேதனை இவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை, "வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல", "எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்" என நினைப்பவர்களே இந்தக் கூட்டத்தினர்.

பாராட்டுக்கள் முகுந்தன்.