அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, July 14, 2009

காலங்கடந்த ஞானம் - அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பெயரை இப்போது பலர் தமது பேச்சுக்களில் தெரிவிப்பது ஆச்சரியமளிக்கிறது!


தன்னலமற்றுப் பணிபுரிந்த பலரை (அவர்களில் அமிர்தலிங்கம் அவர்களும் ஒருவர்) புறந்தள்ளி குற்றம் சுமத்தியவர்கள் தற்போது மீள நினைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது!
அமரத்துவமடைந்த நீலனைப் பற்றி புலிகளின் ஆலாசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களும் கருத்துத் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமென நினைக்கின்றேன். அவசரத்தில் காரண காரியங்களை யோசிக்காமல் கொலை செய்துவிட்டு இப்போது அவர்கள் இல்லாத சமயத்தில் அவர்களைப்பற்றிப் பேசுவது முட்டாள்த்தனம்தான் எனினும் காலங்கடந்தாவது ஞானம் ஏற்பட்டதில் ஓரளவு திருப்தி ஏற்படுகிறது!கொலைசெய்யப்பட்டு சரியாக 20 வருடங்கள் கடந்த நிலையில் இன்று இந்தச் செய்தியை எழுதவேண்டியவனாக இருக்கிறேன்.
ஒரு விடுதலை இயக்கத்துக்குப் பாராளுமன்றத் தேர்தல் முக்கியமானதல்ல – ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இப்படியான அனாதரவான நிலையில் தவிக்கம் தமிழ் மக்களுக்காக அரசுக்கு அஞ்சாமல் - புத்தபிக்குவுக்குப் பயப்படாமல் _ சிங்கள மக்களின் தயவை எதிர்பார்க்காமல் - குரல் கொடுக்கக்கூடிய, வாதிடக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உரிய உரிமைகளைப் பயன்படுத்தி போராடக்கூடிய ஒரு பிரதிநிதி விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தால் ஓரளவு பாதுகாப்பாக இருக்கலாமல்லவா என்பதை இலட்சிய இதயங்கள் சிந்திக்க வேண்டும். ( இலட்சிய இதயங்களோடு என்ற நூலில் இருந்து)

No comments: