Wednesday, July 29, 2009
"நல்லைக் குமரன்" 17ஆவது நூல் வெளியீடு - 04.08.2009
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுவினரால் நல்லூர் முருகப் பெருமானுடைய திருவிழாக் காலங்களில் வருடாந்தம் வெளியிடப்படும் நல்லைக் குமரன் மலர் தொடர்ச்சியாக 17ஆவது முறை இந்தத்தடவையும் எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் நாவலர் மண்டபத்தில் வெளியிடப் படவிருக்கிறது.
அலங்காரக் கந்தனின் அழகுத்திருக் கோலங்களுடன் - அருமையான கட்டுரைகள் கவிதைகள் அடங்கிய நூலை ஒவ்வொரு தடவையும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அடியேனுக்கு இச்செய்தி பேருவகை அளிக்கிறது! எப்போது இப்புத்தகத்தைப் பார்ப்பேன் என்ற ஆவலில் இச்செய்தியைப் பதிவிலிடுகிறேன். தகவலைத் தெரிவித்த மாநகர சபையின் முன்னாள் செயலக அதிகாரி சைவத்திரு. இரத்தினசிங்கம் அவர்களுக்கு நன்றிகள்!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்லைக்கந்தன் ஆலய மஹோட்சவ காலங்களில் நல்லைக்குமரன் நூல் வெளியீட்டுவிழா இடம்பெறுவது ஒரு மரபாகவே கைக்கொள்ளப்படுகின்றது. எத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் சில மரபுகளையும், சில விழுமியங்களையும் யாழ்மண் தொலைத்துவிடாமடல் தக்கவைத்துக்கொண்டுள்ளது பாராட்டப்படவேண்டியதே.
உலகில் எம்மூலையில் இருந்தாலும், நல்லைக்கந்தன் உட்சவத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிய யாழ்ப்பாண சைவநன் மக்களின் நெஞ்சம் துடிப்பது இயல்பு.
அந்த ஏக்கங்களை தீர்த்து வைக்குமுகமாக நண்பர் ஒருவர் தினந்தோறும் தற்போது இடம்பெற்றுவரும் திருவிழாக்களின் தொகுப்பாக உடனுக்கடன் புகைப்படங்களை வலையேற்றிவருகின்றார்.
என்ற தளத்திற்கு விஜயம் செய்து நல்லைக்கந்தனின் திருக்கோலத்தை காணலாம்.
http://nalluran.com/
Post a Comment