அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, July 30, 2009

இப்படியெல்லாம் நடக்கிறது! புதிய எனது அனுபவம்! கிறீஸதவ தேவாலயத்தில் தேவாரமும் - ஜோதிப் பாடலும் பாடிய எனது மறக்க முடியாத அனுபவம்!


பதிவிடத் தொடங்கி சரியாக ஒரு வருடம் நிறைவுபெறும் இந்த July மாதத்தில் தற்போது சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் எனக்கு ஏற்பட்ட இந்த மறக்க முடியாத சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டேயாக வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதிகிறேன்.

நாம் இருக்கிற இந்த மாவட்டத்தின் தலைநகரம் சுவிற்ச் (Schwyz) என்று அழைக்கப்படுகிறது. நாட்டை சுவைற்ச் (Schweiz) என்பார்கள் - உச்சரிப்பிலே சிறிது தடுமாற்றம் வந்தே தீரும். எமது மாவட்டத்தின் பெயரும் சுவிற்ச்தான் (Schwyz). அழகிய மலைப்பிரதேசம் - ஏரிகள் காடுகள் குடிமனைகள் என்று பரந்து இருக்கிறது. இங்கு சைவக் கோவில்கள் எதுவுமில்லை. தமிழர்களும் அதிகமில்லை. எனவே நாம் கோவிலுக்குப் போவதென்றால் அருகில் இருக்கும் சுக்(Zug) அல்லது லுசேர்ன் (Luzern) அல்லது சூரிக் (Zürich ஆங்கிலத்தில்தான் சூரிச்) இங்குள்ள கோவில்களுக்குத் தான் போக வேண்டும். ஆனால் எமது மாவட்டத்திலுள்ள கறுப்பு மேரி மாதா ஆலயம் பிரசித்தி பெற்றது. நாம் முகாமிலிருந்த ஏழரை மாதக் காலப் பகுதியில் ஒவ்வொரு செவ்வாயும் இந்த தேவாலயத்திற்குச் சென்று வருவது வழக்கம்.
நான் சுவிற்ச்லாந்துக்கு வந்தது 19.04.2007இல் - 23இல: முகாமில் சென்று பதிந்தபின் மே 4இல் இந்த மாவட்டத்திற்கு என்னை மாற்றினார்கள். இங்குள்ள மோர்ஷாஹ் என்ற முகாமில்தான் இடுத்த ஏழரை மாதங்கள் வாசம். அப்போது எம்மிடம் அடிக்கடி வந்து செல்லம் இராஸன் அண்ணா ஒரு நாள் வந்து ஒரு நிகழ்வு நடப்பதாக எம்மை அழைத்துப் போனார். என்ன நிகழ்வு என்றால் இந்த குறிப்பிட்ட தேவாலயத்திற்கு ஏன் அதிகமான இலங்கையர்கள் வருகிறார்கள் என்ற ஒரு சிறிய பரிமாற்ற நிகழ்வு.
நான் சுவிற்ச்லாந்துக்கு வந்தது 19.04.2007இல் - 23இல: முகாமில் சென்று பதிந்தபின் மே 4இல் இந்த மாவட்டத்திற்கு என்னை மாற்றினார்கள். இங்குள்ள மோர்ஷாஹ் என்ற முகாமில்தான் இடுத்த ஏழரை மாதங்கள் வாசம். அப்போது எம்மிடம் அடிக்கடி வந்து செல்லம் இராஸன் அண்ணா ஒரு நாள் வந்து ஒரு நிகழ்வு நடப்பதாக எம்மை அழைத்துப் போனார். என்ன நிகழ்வு என்றால் இந்த குறிப்பிட்ட தேவாலயத்திற்கு ஏன் அதிகமான இலங்கையர்கள் வருகிறார்கள் என்ற ஒரு சிறிய பரிமாற்ற நிகழ்வு.

அன்று 26.08.2007 எனது பெரிய தந்தையாரின் பிறந்த நாள். சரி என்று காலை 10.00 மணியளவில் நாம் ஒரு பாடசாலையில் நடைபெற்ற முதல் நிகழ்வில் கலந்து கொண்டோம் எமது மாவட்டத்திலிருக்கின்ற தமிழர்களும் - சுவிஸ நாட்டவருமாக சுமார் 80பேர் இந் நிகழ்வில் கலந்த கொண்டார்கள். விவரணப் படஙஇகள் கருத்துரைகள் பரத நாட்டிய நிகழ்வுகள் சுவிஸ நாட்டவரின் இசை என்று பல நிகழ்வுகள் நடைபெற்ற பிறகு இரு நாட்டவரும் எதிரெதிராக அமர்ந்து இலங்கை உணவு அருந்திüனோம். அறிமுகங்கள் மற்றம் நட்பு ரீதியில் இந்த நிகழ்வைத் தொடர்ந்து அருகிலிருந்த கிறீஸ்தவ தேவாலயத்தில் ஒரு பிரார்த்தனை இருக்கிறது என்று அழைத்துப் போனார்கள் - அருகிலிருந்தபடியாலஇ எல்லோரும் நடந்தே சென்றோம். நகரின் மத்தியில் அமைந்திருந்த இந்த தேவாலயத்தள் போனதுமே எனக்கு தூக்கி வாரிப் போட்டது. தேவாலயத்தின் பீடத்திற்கு முன்பாக பிள்ளையார் மகாலட்சுமி முருகனுடைய படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
எல்லோரும் வந்த அமர்ந்ததும் என்னை வந்து கேட்டார்கள் தேவாரம் பாடுவீர்களா என்று? ஓம் என்று சொன்னேன். வணக்கத்திற்குரிய பாதிரியார் தமது வழிபாடுகளை முடித்துக்கொண்டு என்னை அழைத்தார்.

3 தடவைகள் பிரணவ மந்திரத்தை ஒலிபெருக்கியில் இசைத்தபோதே அதிர்வு கொண்ட தேவாலயத்தில் மெய்யுருகி தேவாரத்தையும் புராணத்தையும் வாழ்த்தையும் இசைத்து முடித்தேன். நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று முடிந்த பிறகு பங்குபற்றிய அனைவருமே வந்து பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்கள். சிறு வயதிலேயே கொஞ்சம் சங்கீதம் கற்றதனால் ஓரளவு பாட முடியும். நிகழ்வில் கலந்த கொண்ட இன்னொரு பாதிரியார் தமது இடத்தில் நடைபெறப் போகும் ஒரு நிகழ்வில் என்னை வந்து பாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். (மீதி பின்னர்)

2 comments:

Jana said...

கண்ணீரால் கழுவப்பட்ட கண்களுக்கே புண்ணி தரிசனங்கள் கிடைக்கும்....

ஈழவன் said...

அண்மையில் ஒரு நபரைச் சந்தித்தேன், அவர் தோற்றத்தில் சபரிமலை செல்லும் யாத்திரிகர் போன்று காணப்பட்டார், ஆனால் கழுத்தில் உருத்திராக்கமில்லை, பதிலாக சிலுவையுடன் கூடிய செபமாலை அணிந்திருந்தார், காரணம் கேட்டேன்.

வேளாங்கண்ணி மாதா தேவாலயத்துக்கு யாத்திரை போவதாகக் குறிப்பிட்டார், ஆனால் இவர் கிருஸ்தவரோ அல்லது மன நோயாளியோ அல்ல என்பதை அக் கணமே அறியக் கூடியதாக இருந்தது.

மொத்தத்தில் கடவுளர் மீதிருந்த காதலை அறியக் கூடியதாக இருந்தது.

தங்களின் இந்தப் பதிவை வாசித்ததும், எனது கொள்கைக்கு அப்பாற்பட்ட விடயமாக இருந்தாலும் கூட மேலே கூறப்பட்ட இச் சம்பவம் ஏனோ எனது மனதைக் குடைந்தது.