அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, July 11, 2009

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்த நண்பர் ஒருவருடைய செய்திப்படி இப்போதே நாடு திரும்ப ஆசையாயிருக்கிறது!

எனது ஊரிலுள்ள எமக்கு வேண்டிய முக்கிய நண்பர் ஒருவரின் கருத்தை முழுமையாகக் கேட்ட பின்னர் உடனடியாக இப்பதிவை இடுகிறேன்.
மூளாய் தனியார் கூட்டுறவு வைத்தியசாலை புதுப் பொலிவு பெறுகிறது!
மூளாயிலிருந்து காரைநகர் செல்லும் பொன்னாலைப் பாலத்தில் புதிய பாதை அமைக்கப்பட்டு இருவழிப்பாதையாக்க திட்டம்.
நவாலி வழுக்கையாறுப் பாலம் திருத்தம்.
பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சாதாரணமாகச் சென்று வரும்நிலை. திருவடிநிலைக்கும் அடையாள அட்டையைக் கொடுத்துவிட்டுப் போய்வரலாமாம்.
மாவிட்டபுரம் கோவிலுக்கு தனியார் வண்டியில் பயணம் செய்யலாமாம்.
ஏ 9 பாதையூடாக மாணவர்கள் போட்டிகளுக்குப் போனதாகவும் தகவல்.
ஜனாதிபதியின் துணைவியாரும் மகனும் இரு தடவைகள் பொன்னாலைக்கு விஜயம் செய்ததாகவும் இரண்டாவது தடவை சென்றபோது ஊர்மக்கள் பலருக்கும் பல பொருட்கள் வழங்கியதாகத் தகவல்.
பொருட்களின் விலை திடீரெக் குறைவடைந்தள்ளது!(கொழும்பை விட 20,30 ரூபாதான் வித்தியாசம்)
படையினரின் கெடுபிடிகள் குறைவடைந்து இயல்பு நிலை திரும்புகிறது.
ஆண்டவனே! இதை எல்லாம் பார்க்கவேண்டும் கேட்க வேண்டும் என்றா இவ்வளவு நாளும் எனது உயிரைக் காப்பாற்றி வைத்திருந்தாய்!

No comments: