

கலைஞர்கள் சண்முகசர்மா ஜெயப்பிரகாஷ் சர்மா, தீபால் குணசேன, தினுகா குணசேகர, திலினி தனபால ஆகிய நால்வரும் ஆடல் வல்லோனின் அருள்பெற்று ஆனந்தமாக வாழ கிருத்தியம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் - நாட்டிய ஆசிரியை கலாசூரி திருமதி வாசுகி ஜெகதீஸ்வரன் அவர்களின் பணிக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். நவராத்திரி கால நேரமொன்றில் திகதி ஞாபகத்திற்கு வரவில்லை - கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கில் ஸ்ரீ முத்துக்கிருஷ்ண சுவாமி மிஷனிரால் நடத்தப்பட்ட நவராத்திரி கலைநிகழ்வில் இவரும் இவரது குழுவினரும் வழங்கிய நாட்டிய நிகழ்வு இன்னமும் என் கண்ணில் மறையாமல் இருக்கிறது. நாட்டியத்தின் இறுதியில் அன்னை ஆதிபராசக்தியாக இவரும் இவரது மாணவர்களும் ஒன்று சேரத் தோன்றும் அந்த அருமையான - அற்புதமான காட்சி - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அன்னையே நேரில் அருள் தந்த காட்சி - நான் கையெடுத்துக் கும்பிட்டு கண்ணீர் சொரிந்த அனுபவம் வாழ்க்கையில் மறக்க முடியாது! தத்ரூபமான அபிநயமிக்க ஆடல்!
No comments:
Post a Comment