அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, July 31, 2009

இப்போது கிடைத்த செய்தி - எமது மூளாய் பிள்ளையார் மற்றும் முருகன் கோவில்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!


நேற்று 30.07.2009 வியாழக்கிழமை இரவு 11.00மணிக்கும் 4.00மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கோவில் கதவு உடைக்கப்பட்டு உள்ளிருந்த சகல விக்கிரகங்களும் பெயர்க்கப்பட்டு இருந்த சகல பெறுமதியான பொருட்களும் நகைகளும் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக கொழும்பிலிருந்த நண்பர் ஒருவர் அறிவித்தார். உடனடியாகவே ஊருக்கு தொடர்பு கொண்டு சம்பவத்தை ஊர்ஜிதம் செய்த பின்னர் பதிவிலிடுகிறேன். 2 தடவைகள் பொலிசார் வந்து விசாரணைகள் மற்றும் கைரேகைகளைப் பதிவுசெய்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூலஸ்தானத்தில் இருந்த பிள்ளையாருடைய சிலையையும் பெயர்த்து மறுபக்கமாக திருப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்னர்தான் அரசடிச் சந்தியிலிருந்த மற்றும் சுழிபுரம் தபாற்கந்தோருக்கு அண்மையிலிருந்த இராணுவச் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டன. நேற்று யாழ்ப்பாண நகருக்கு இண்மையில் இளம் தம்பதியினர் அலவாங்கால் கொத்திக் கொலைசெய்யப்பட்டு பணம் நகை கொள்ளை என்ற செய்தி பத்திரிகையில் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

ஈழவன் said...

ஆயுதங்கள் மலிந்த பூமியில்
கோலோச்சுகின்றதே
கயவர்களின் கரங்கள்!

கொள்ளையர்களின் கொடுமைகளுக்கு
உடன்படுகின்றதே
தேவாலயத் தெய்வங்களும்!

இறைவனும் மௌனித்ததால்
ஆட்டம் கண்டதே
அழகிய நம் தேசம்!