அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, July 8, 2009

சோதனைகள் - விசாரணைகளின் போது கலாச்சாரப் பண்புகளை அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் நிகழ்வுகளைத் தவிர்க்க உரியவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஆலயத்தினுள் பாதணிகளுடன் படையினரும் பொலிசாரும்
நூலகத்தினுள் பாதணிகளுடன் இந்திய அதிகாரிகள் மற்றும் பொலிசார் - படையினர்

நான் அறிந்த - ஆதாரத்துடன் நிருபிக்கும் இரண்டு சம்பவங்களை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழர்களின் மொழி - இன ஒதுக்கல்களுக்கு மேலாக கலாச்சார அவமதிப்பும் இடம்பெறுவதால் அதையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய தேவைகருதியே இதைப் பதிவிலிடுகிறேன்.

முதலாவது நிகழ்வு கடந்த 1.1.2008இல் சுட்டுக்கொலைசெய்யப்பட்ட ஐ.தே.கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்களுடைய விசாரணைகளுக்காக நடைபெற்றது. ஆலயத்தில் கொலை நிகழ்ந்தமையால் அங்கு விசாரணைக்குச் சென்ற பாதுகாப்புப் படையினரும் - பொலிசாரும் ஆலயவிதிமுறைகளுக்கு மீறி பாதணிகளுடன் உள்ளே நுழைந்தமை ஒரு நியாயமற்ற செயலாகவே இருக்கிறது. மனித உயிர்களை – மனிதப் பண்புகளை மதிக்கத் தெரியாதவர்கள் எல்லாரையும் இதில் நான் அடக்கவிரும்புகிறேன்.

இரண்டாவதாக நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றது. கோவில்களை விடவும் புனிதமாகப் பேணிவரும் கலாச்சாரப் பெருமைமிக்க யாழ் நூலகத்துக்குள் இந்திய அதிகாரிகள் வருவதாகச் சொல்லி காலையிலேயே அங்கு சென்ற படையணியினர் வழக்கத்திற்கு மாறாக நூலகத்தினுள் தமது பாதணிகளுடன் சென்றமைகுறித்த செய்தி அறிந்த உடனேயே இன்று காலையில் பிரதம நூலகருடன் தொடர்பு கொண்டு எனது வருத்தத்தைச் சொன்னேன். எனது வலைப்பதிவில் மனம் கவர்ந்தவையில் நாங்கள் எப்படி அதை மதிக்கிறோம் Jaffna Library (யாழ். நூலகம் காணொளி) என்பதைப் பார்க்கலாம். அதில் நூலகத்திற்கு வருகைதருவோர் எப்படி பாதணிகளை கழற்றி வைக்கின்றார்கள் என்பதைப் பாருங்கள்!

இதை யார் சொல்லுவது? யாருக்கச் சொல்வது? என்பது அடுத்த கேள்வி!

குறிப்பு - இதை எழுதியபிறகுதான் ஞாபகத்திற்கு வந்தது இலங்கையில் தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் மறைந்த சார்ஜன் நல்லதம்பி என்ற பாத்திரத்தில் வரும் மறைந்த நடிகர் ஒருவரும் வீபூதியை நெற்றியில் தரித்துக்கொண்டு நையாண்டி செய்வதும் என் மனதை வேதனைப்படுத்திய நிகழ்வுகளில் ஒன்று!

புகைப்படங்களுக்காக நன்றி - வீரகேசரி, தமிழ்வின், www.transcurrents.com/tamiliana/archives/478

No comments: